fbpx

“பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை..” வசமாக சிக்கிய ‘பாஜக’ பிரமுகர்.! 4 பிரிவுகளில் வழக்கு பதிவு.!

மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாகர்கோவில் பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோட்டாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மேலும் உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வர வேண்டி இருந்திருக்கிறது . இந்நிலையில் அவசர தேவைக்காக மருத்துவரின் செல்போன் நம்பரை வாங்கி இருக்கிறார் ஜெயக்குமார் . ஆரம்ப கட்டத்தில் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு மட்டும் தொலைபேசி செய்த அவர் அதன் பிறகு அடிக்கடி போன் செய்து பெண் மருத்துவரிடம் பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மேலும் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவருக்கு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் ஜெயக்குமார். இவரது தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாத பெண் மருத்துவர் இது தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகரான ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறை நடத்திய விசாரணையில் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது . கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது முதல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது வரை பல சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.

Next Post

தமிழ்நாடு அரசின் விருதுகள் அறிவிப்பு..!! ஒரு சவரன் தங்கப் பதக்கம், ரூ.2 லட்சம் ரொக்கம்..!!

Fri Jan 12 , 2024
தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக்‌ கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும்‌ தமிழுக்கும்‌, தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு தொண்டாற்றிடும்‌ தமிழ்த்தாயின்‌ திருத்தொண்டர்களுக்குத்‌ தமிழால்‌ விளங்கிடும்‌ தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும்‌, சிறப்புக்களையும்‌ அளித்து தமிழ்த்தொண்டுக்குப்‌ பெருமை சேர்த்து வருகிறது. அதன்படி, ◾️ திருவள்ளுவர் விருது – தவத்திரு பாலமுருகனடிமை சுவாமி ◾️ மகாகவி பாரதியார் விருது – கவிஞர் பழநிபாரதி […]

You May Like