“அவர் அமித்ஷாவா? இல்ல அவதூறுஷாவா? நான் இருக்கும் வரை நீங்க நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது..” CM ஸ்டாலின் சூளுரை..!

stalin amit shah

திண்டுக்கல்லில் ரூ.337.84 கோடி மதிப்புள்ள 111 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.. ரூ.1,082 கோடியில் 2.66 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.. மேலும் திண்டுக்கல்லில் ரூ.174.20 கோடி மதிப்பிலான 212 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..


தொடர்ந்து இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் “ திண்டுக்கல், புரட்சி, எழுச்சி வீரத்தின் பெயர்.. இந்த திண்டுக்கல் மாவட்டத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை கொண்டாட இனிப்பான சர்க்கரை பொங்கல் போன்ற மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு தான் இங்கு வந்திருக்கிறேன்..மேலும் திண்டுக்கல் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

திண்டுக்கல்லுக்கு மட்டும் இல்ல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன தேவைகள் என்று பார்த்து பார்த்து செய்து கொண்டு வருகிறோம்.. இதனால் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியை பெற்று வீர நடை போட்டு வருகிறது. நான்கரை ஆண்டுகளாக சாதனை திட்டங்களை செய்து வரும் அரசு, புத்தாண்டில் புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம்..

நாட்டில் சாமானிய மக்கள் யாரும் நிம்மதியாக இருக்க கூடாது என்று சொல்லும் ஒரு கூட்டம் உள்ளது.. இந்த திட்டத்தை எல்லாம் செய்யவே முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்.. ஆனால் நாம் செய்து காட்டி உள்ளோம்..

தமிழ்நாட்டில் இருக்கும் சுமார் 2 கோடி ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல அரிசி, கரும்புடன், வேஷ்டி சேலை என சேர்த்து பொங்கலுக்கு வழங்க உள்ளோம்.. வரும் பொங்கல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களுக்காக தரக் கூடிய மகிழ்ச்சி பொங்கல்.. உலகம் உங்கள் கையில் என்ற திட்டத்தின் மூலம் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்துள்ளோம்.

2019-ம் ஆண்டு பழனிசாமி முதல்வராக இருந்த போது, மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டார். அதிமுக ஆட்சியில் 55,000 லேப்டாப்களை வீணடித்துவிட்டதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.

சமீபத்தில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் அமித்ஷாவா இல்லை அவதூறு ஷாவா என்ற சந்தேகம் வருது.. அந்தளவுக்கு உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டு சென்றுள்ளார்.. தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகளுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாடு செயல்படுகிறது என்று அமித்ஷா பேசிவிட்டு சென்றுள்ளார்.. இதற்காக எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்..

நமது அரசு பொறுப்பேற்றதில் இருந்து சுமார் 4000 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்.. இப்படி ஒரு சாதனையை நீங்கள் ஆளும் பாஜக மாநிலங்களில் செய்துள்ளீர்களா? திருக்கோயில்களுக்கு சொந்தமான 7655 ஏக்கர் நிலங்களை மீட்டுள்ளோம்.. உண்மையான பக்தர்கள் நமது அரசை பாராட்டுகின்றனர்..

ஆன்மீக பெரியவர்கள் விரும்பும் ஆட்சியாக நமது ஆட்சி உள்ளது.. அனைத்து சமயத்தினர் மத உரிமைகள் மதிக்கப்படும் ஆட்சியை நடத்தி வருகிறோம்.. இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துக்களின் மத உரிமைகள் பறிக்கப்படுகிறது என்று துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் சொல்வது அவரது பதவிக்கு கண்ணியம் அல்ல..

கலவரம் ஏற்படுத்த வேண்டும் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற உங்கள் எண்ணம் தான் தமிழ்நாட்டில் நிறைவேறவில்லை.. இனியும் நடக்காது.. ஸ்டாலின் இருக்கும் வரை நடக்காது.. நீட்டை திணிக்கும், தொகுதி மறுவரை என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஜனநாயக வலிமையை குறைக்கும் பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் அமைய எடப்பாடி பழனிசாமி பாடுபடுகிறார்.

2019,2019,2024 என மூன்று தேர்தல்களிலும் படுதோல்வியை தந்தது உங்களுக்கு புரியவில்லை. மக்கள் நமது அரசு பக்கம் தான் இருக்கின்றனர்.. திரும்பவும் நாம் தான் வருவோம்.. நல்லாட்சியை தொடர்வோம்.. திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதிய சாதனைகளை படைப்போம்..” என்று தெரிவித்தார்..

Read More : “ திமுக மீது மக்கள் ஆத்திரத்தில் இருக்கின்றனர்.. எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்..” இபிஎஸ் – அன்புமணி கூட்டாக பேட்டி..!

RUPA

Next Post

தமிழ்நாடு SIR விவகாரம் : வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் இரட்டை வேடம் போடும் திமுக..! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு..!

Wed Jan 7 , 2026
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி, தமிழ்நாட்டில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் திமுக, எஸ்.ஐ.ஆர் பணி தொடர்பாக முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுப்பதாக அதன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாடு தழுவிய சிறப்புத் தீவிரத் திருத்தச் செயல்முறையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ள நிலையில், ஆளும் கட்சியானது தமிழ்நாட்டில் கள அளவில் இந்தத் திருத்தப் பணிகளில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் […]
sir dmk

You May Like