நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது என்று அதில் கூறியிருந்தது..
இதுகுறித்து விளக்கம் அளித்த கே.என். நேரு அதிமுக – பாஜக கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் அவதூறு பிரச்சாரம். நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கி உள்ளது.. இது அமைச்சர் கே.என். நேருக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.. சட்டப்படி விசாரணையை எதிர்கொள்வேன் என்று கே.என். நேரு விளக்கம் அளித்திருந்தார்.. எனினும் செந்தில் பாலாஜியை பொல் கே.என்.நேருவும் விரைவில் கைது செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது..
எனினும் இந்த தகவல் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சில முக்கிய அமைச்சர்களை அமலாக்கத்துறை மூலம் குறிவைத்து பாஜக காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.. அதன் ஒரு பகுதியாகவே ஊழல் புகாரில் சிக்கிய சில அமைச்சர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.. இந்த சூழலில் கே.என். நேரு கைது செய்யப்படலாம் என்று வெளியாகி உள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..



