தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார்.. விஜய் முதல்வர் முதல்வரானதும், பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.. இந்த அதிரடி படையின் முதல் பெண் ஐ.ஜியாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளது.. இந்த சிறப்பு படையில் ஒரு போலீஸ் சூபிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்ட்கள் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த சிறப்பு அதிரடிப்படையில் இடம்பெறும் பெண் போலீஸ் மற்றும் பெண் சப்- இன்ஸ்பெக்டர்களுக்கு சிறப்பு சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. இந்த திட்டத்தை கடந்த கடந்த 28-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது..
இதற்கான முழு ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டது.. அன்றைய தினம் தான் முதல்வர் விஜய் தனது மேலாளர் ஜெகதீஷ் இல்ல விழாவுக்கு வேஷ்டி சட்டையில் சென்றிருந்தார்.. இந்த விழாவுக்காக தான் சிங்கப்பெண் திட்டம் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டதா என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் முதல்வர் இந்த திட்டத்தை எப்போது தொடங்கி வைப்பார் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்..
இந்த நிலையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் இன்று மாலை 5 மணிக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை திட்ட தொடக்க விழா நடைபெறுகிறது..
இந்த திட்டத்தை முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்.. தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அக்ர்வாலும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.
Read More : “முதல்வர் விஜய் இனியும் ஒளிந்துகொள்ளாமல் பொதுவெளியில் இதற்கு பதிலளிக்க வேண்டும்..” திமுக காட்டம்..!



