‘F*ck You’ : நடுவிரலை காட்டி, ஃபோர்டு ஊழியரை கோபமாக திட்டிய டிரம்ப்..! ஏன் தெரியுமா? வைரல் வீடியோ..!

trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை ஃபோர்ட் கார் தொழிற்சாலையை பார்வையிட்டபோது, அங்கிருந்த ஒருவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, டிரம்ப் அந்த நபரிடம் அநாகரிக சைகை (middle finger) காட்டியதும், கோபமாக கத்தி திட்டியதும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை TMZ வெளியிட்டது. வெளியான உடனேயே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.


அந்த வீடியோவில் என்ன இருக்கிறது?

வீடியோவில், டிரம்ப் முதலில் அந்த நபர் பேசுவதைக் கேட்கிறார். அதற்குப் பிறகு அவர் “F*k you” என்று சொல்கிறார். அதன் பின் அவர் நடந்து செல்லும் போது அந்த நபருக்கு middle finger காட்டுகிறார். பிறகு உடனே திரும்பி கூட்டத்தினருக்கு கை அசைத்து வணக்கம் சொல்லத் தொடங்குகிறார்.

அந்த தொழிலாளி டிரம்பை நோக்கி குழந்தை பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பவன் என்று கத்தினார். ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்ற குழந்தை பாலியல் குற்றத்தில் தண்டிக்கப்பட்ட நபரைச் சுற்றியுள்ள ஆவணங்கள் (Epstein files) தொடர்பான சர்ச்சை தான் அவர் அப்படி கத்தியதற்கு காரணம்… அந்த கோப்புகளை டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தாலும், அதில் பல பகுதிகள் மறைக்கப்பட்டு (redacted) வெளியிடப்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தாமதங்களும் மறைப்புகளும் தான் இத்தகைய நேரடி மோதல்களுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

டிரம்பின் இந்த நடத்தை குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.. அதில் “ஒரு மனநலம் குன்றியவன் போல அந்த நபர் கோபத்தில் ஆபாசமாக கத்திக்கொண்டிருந்தார். அதற்கு அதிபர் கொடுத்த பதில் தெளிவானதும், சரியானதும் தான்.” என்று தெரிவித்தது.

சமூக ஊடகங்களில் எதிர்வினைகள்

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், பலரும் விதவிதமாக கருத்து தெரிவித்தனர். “எங்கள் அதிபர், யாரையும் இவ்வளவு எளிதாக யாரும் அவமதிக்க விடமாட்டார்!” என்று ஒருவர் எழுதினார். “இப்படிப்பட்ட மனிதன் நமக்கு கிடைத்திருக்கிறதே நம் அதிர்ஷ்டம்” என மற்றொருவர் பதிவிட்டார்.. இன்னொருவர், “நான் இவருக்குத்தான் வாக்களித்தேன் – பெருமையுடன்!” என்று பதிவு செய்தார்.

உடல்நிலை குறித்த சந்தேகம்

அதே நாளில், டிரம்ப் டிட்ராய்டில் உள்ள Detroit Economic Club நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் திடீரென தொண்டையை சுத்தம் செய்யும் காட்சி சிலருக்கு அவரது உடல்நிலை குறித்து கவலை ஏற்படுத்தியது.

ஒருவர் சமூக ஊடகத்தில “பேச்சு தெளிவில்லாமல் உள்ளது. வாயில் உமிழ்நீரை விழுங்குவது போல தெரிகிறது. குழப்பமாக பேசுகிறார்… வாய் வலப்பக்கம் சாய்ந்திருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.

பொருளாதாரம் குறித்து டிரம்ப்

இந்த உரை, அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு பொருட்களின் விலை உயர்வு விவாதமாகி வரும் நேரத்தில் நடைபெற்றது. இந்த விலை உயர்வு, நவம்பர் மாதம் நடைபெற உள்ள இடைத் தேர்தலுக்கு முன்னதாக டிரம்பின் மக்கள்தர ஆதரவைக் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது.

விலை உயர்வு குறித்து பேசும்போது டிரம்ப், “நாட்டில் மிகக் குறைந்த பணவீக்கம் தான் உள்ளது” என்று வாதிட்டார். அதற்குக் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) பதவி விலகும் தலைவர் ஜெரோம் பவல் மீது குற்றம் சாட்டினார்.

RUPA

Next Post

ஆன்லைனில் அராஜகம், ரவுடிசம்..! பராசக்தி நெகட்டிவ் விமர்சனம்.. விஜய் ரசிகர்களை சாடிய சுதா கோங்கரா..!

Wed Jan 14 , 2026
சிவகார்த்திகேயனின் ‘பரசக்தி’ திரைப்படம் ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கடைசி நிமிடம் வரை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திடம் சிக்கலில் இருந்தது.. படம் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்புதான் 25 மாற்றங்களுடன் ‘யு/ஏ’ சான்றிதழைப் பெற்றது. ‘பரசக்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது, ஆனால் இந்தப் படம் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் லாபகரமானதாக அமைந்துள்ளது என்று தயாரிப்பாளர்கள் கூறினர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள […]
sudha kongara vijay

You May Like