சீறும் காளைகள்.. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

jallikattu udhyanidhi 1

பொங்கல் பண்டிகை என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு போட்டிகள் தான்.. தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை அடக்கும் வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.. அதே போல் அடங்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.. ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பதை தாண்டி தமிழர்களின் கலாச்சாரம், வீரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக கருதப்படுகிறது..


தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும், மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பிரசித்தி பெற்றவை.. சமீபத்தில் மதுரைக்கு என பிரத்யேக ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.. இந்த நிலையில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது..

இந்த போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. 600 மாடுபிடி வீரர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.. இந்த நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டி மொத்த 10 சுற்றுகள் நடைபெறும்.. ஒவ்வொரு சுற்றிலும் அதிக காளைகளை பிடித்த வீரர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர்.. இறுதிச்சுற்றில் அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.. வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்..

Read More : Flash : மாட்டுப் பொங்கல் நாளில் குட்நியூஸ்.. இன்று மட்டும் ரூ.4,000 குறைவு..! தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..!

RUPA

Next Post

உங்களுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கா? அது எவ்வளவு ஆபத்துன்னு தெரிஞ்சா உடனே நிறுத்திடுவீங்க..!

Fri Jan 16 , 2026
நகம் கடிக்கும் பழக்கம் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பழக்கமாகும். இருப்பினும், இது அதிகமாக இருந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுகூறுகின்றனர். மன அழுத்தம், பதட்டம் அல்லது சலிப்பு காரணமாக நகம் கடிக்கும் பழக்கம் தொடங்குகிறது. பலர் இதை ஒரு சிறிய பழக்கமாகவே கருதுகின்றனர். இருப்பினும், இது நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால், அது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நகங்களைக் கடிக்கும் மக்களைப் பாதிக்கும் […]
nails biting 1

You May Like