fbpx

BREAKING NEWS | “கலைஞரின் நிழல்” உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்.!

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆறு முறை திராவிட முன்னேற்றக் கலகம் சார்பாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் மூன்று முறை அமைச்சராகவும் பதவி வைத்திருக்கிறார்.

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞருடன் நிழல் போல இருந்து அவரைப் பார்த்துக் கொண்டவர் ஆற்காடு வீராசாமி. இதன் காரணமாக கலைஞரின் நிழல் என செல்லமாக அழைக்கப்பட்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராகவும் மின்சாரத் துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்காக கட்சியின் பொருளாளர் பதவியை விட்டுத் தந்தவர் ஆற்காடு வீராசாமி என்பதும் குறிப்பிடத்தக்கது. 2011 ஆம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகிய ஆற்காடு வீராசாமி ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு வடபழனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் உடல் நலம் பெற்று மீண்டு வர தொண்டர்கள் தங்களது பிரார்த்தனையையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Next Post

"குடிக்க தேங்காய் தண்ணி.." "படுக்க மரக்கட்டில்" ஸ்ரீராமருக்காக பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பு.!

Thu Jan 18 , 2024
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்விற்காக கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு சடங்குகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கு இந்தியா மற்றும் உலக அளவில் பல்வேறு அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் திரைத் துறையினர் மற்றும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் ஸ்ரீராமரின் […]

You May Like