முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அப்போது “ சத்துணவு அமைப்பாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தப்படுகிறது.. கூடுதலாக 1,80,000 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.. தூய்மை பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்படும்.. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மேலும்1 லட்சம் வீடுகள் கட்டப்படும். ரூ.1,088 கோடி மதிப்பீட்டில் கிராம சாலைகள் மேம்படுத்தப்படும்..
ஆசிரியர்கள் தகுதி தேர்வுகளில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.. அடுத்த 5 ஆண்டுகளுக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் தொடரும் என்று மக்கள் முடிவு பண்ணிவிட்டனர்.. என்னை விட தமிழக மக்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.. நான் உறுதியாக சொல்கிறேன் நாங்கள் தான் மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்..அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..
Read More : கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் புதிய வீடுகள்..!! சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!!



