பிரிட்ஜில் காய்கறிகளை வைக்கும்போது உஷார்..!! கல்லீரலை கூட பாதிக்கும்..!! சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை..!!

fridge dangerous 11zon e1755838416324

சந்தைக்கு சென்றால் வாரம் முழுமைக்கும் தேவையான காய்கறிகளையும் பழங்களையும் மொத்தமாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) அடைத்து வைப்பது நம்மில் பலரது வழக்கமாகிவிட்டது. கோடைக்காலம் மட்டுமின்றி, கடும் குளிர் நிலவும் காலங்களிலும் ‘ஃப்ரெஷ்’ ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்தையும் பெட்டிக்குள் வைக்கிறோம். ஆனால், குளிர்காலத்தில் சில குறிப்பிட்ட காய்கறிகளைப் பிரிட்ஜில் வைப்பது அவற்றின் தன்மையை மாற்றி, ஆரோக்கியத்திற்குப் பெரும் உலையை வைக்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


குறிப்பாக, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் பூண்டை எப்போதும் மூடிய இடத்திலோ அல்லது குளிர்சாதனப் பெட்டியிலோ வைக்கக் கூடாது. அவற்றைச் சமையலறையில் ஒரு சிறிய கூடையில் போட்டு, காற்றோட்டமான அறை வெப்பநிலையில் வைத்தாலே நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். அவற்றை உரித்தோ அல்லது விழுதாக மாற்றியோ பிரிட்ஜில் வைக்கும்போது, அவற்றிலுள்ள இயற்கையான ஊட்டச்சத்துக்கள் சிதைந்துவிடுகின்றன. அதேபோல், தக்காளியைப் பிரிட்ஜில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு வைப்பதால் தக்காளியின் தனித்துவமான சுவை மற்றும் அமைப்பு மாறுவதோடு, அதிலுள்ள முக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அழிந்துவிடுகின்றன. குளிர்காலத்தைப் பொறுத்தவரை வெளியிலேயே ஒரு வாரம் வரை தக்காளி கெடாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கீரைகள் மற்றும் பச்சை இலை காய்கறிகளை அதிகபட்சமாக 12 மணி நேரம் மட்டுமே குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். அதற்கு மேல் வைக்கும்போது அவற்றின் இயற்கையான சுவை மற்றும் சத்துக்கள் முற்றிலுமாக நீங்கிவிடும். கேரட் மற்றும் காலிஃபிளவர் போன்றவற்றையும் நீண்ட நாட்கள் குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முக்கியமாக, உருளைக்கிழங்கைப் பிரிட்ஜில் வைப்பது ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கும். குளிர்ச்சியான சூழலில் உருளைக்கிழங்கில் உள்ள ‘ஸ்டார்ச்’ (Starch) வேகமான சர்க்கரையாக மாற்றமடைகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமின்றி, ஆரோக்கியமான நபர்களுக்கும் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இஞ்சியைப் பொறுத்தவரை, குளிர்காலத்தில் பிரிட்ஜில் வைத்தால் அதில் பூஞ்சை (Fungi) வளர அதிக வாய்ப்புள்ளது. இத்தகைய பூஞ்சை பாதித்த இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்குத் தீராத பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, காய்கறிகளை வாங்கி வந்து அடுக்கி வைப்பதில் காட்டும் ஆர்வத்தை சரியான முறையில் சேமிப்பதிலும் காட்டினால் மட்டுமே, உணவின் சத்துக்கள் சிதையாமல் நம்மைச் சென்றடையும்.

Read More : ரிஸ்க் இல்லாத லாபம்..!! வெறும் ரூ.1,000 முதலீடு போதும்..!! வட்டி மூலமே ரூ.2 லட்சம் சம்பாதிக்கலாம்..!!

CHELLA

Next Post

“இப்படி யாரும் விசில் அடிக்காதீங்க”..!! செங்கோட்டையன் பேச்சால் வெடித்த விவாதம்..!! விஜய் முன்பே நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Mon Jan 26 , 2026
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற மாநில மற்றும் மாவட்ட அளவிலான செயல் வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையிலேயே அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. குறிப்பாக, கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ‘விசில்’ சின்னத்தைக் கையாள்வது தொடர்பாக மூத்த நிர்வாகிகளிடையே ஏற்பட்ட […]
TVK Vijay 2026

You May Like