அதிரடி காட்டும் அதிமுக..!! சாரை சாரையாக இணைந்த மாற்றுக் கட்சியினர்..!! குஷியில் எடப்பாடி பழனிசாமி..!!

edappadi k palaniswami

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ஒரு முக்கிய அரசியல் நகர்வு அரங்கேறியுள்ளது. சிவகாசியில் நடைபெற்ற பிரம்மாண்டமான இணைவு விழாவில், முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கியத் தலைவருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களை அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.


தற்போது தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகளுடன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் குதித்துள்ளதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில், தனது கோட்டையாக கருதப்படும் விருதுநகர் மாவட்டத்தில் கட்சியை இன்னும் வலுப்படுத்தும் நோக்கில் ராஜேந்திர பாலாஜி இந்த அதிரடி முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு அதிமுகவின் அடையாளமான சால்வைகளை அணிவித்து உற்சாகமாக வரவேற்ற அவர், வரவிருக்கும் தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் வாக்குச் சாவடி அளவிலான வியூகங்கள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனையும் நடத்தினார்.

Read More : அப்படிப்போடு..!! நிலுவைத் தொகையுடன் கிடைக்கப் போகும் ரூ.1,000 உரிமைத்தொகை..!! பெண்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்..!!

CHELLA

Next Post

FLASH | “2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்”..!! நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி..!!

Sat Jan 31 , 2026
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவரும், பிரபல நடிகையுமான குஷ்புவின் சமீபத்திய அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சித் தலைமை பச்சைக்கொடி காட்டினால், வரும் பொதுத்தேர்தலில் தான் மீண்டும் தேர்தல் களத்தில் இறங்குவது உறுதி என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த சில காலமாகக் கட்சிப் பணிகளில் சற்று மௌனம் […]
Kushboo 2026

You May Like