ஓயாத சோகம்.. யாருமே கேட்கல..! 229 உடல்களை நல்லடக்கம் செய்த நேபாள அரசு..!

Nepal 2026 1

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும் மனிதப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் குடியிருப்புகளும் வணிகக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் காண முடியாத உடல்களை உடனடியாக நல்லடக்கம் செய்ய நேபாள அரசு முடிவெடுத்துள்ளது.


நேபாள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி, வெள்ளம் பாதித்த பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுவரை மொத்தம் 626 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக சித்வான் மாவட்டத்தில் இருந்து மட்டுமே 233 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட சடலங்கள் பல நாட்களாக நீரில் ஊறி முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி மிகக் கடுமையான தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சித்வான் பகுதியில் மீட்கப்பட்ட 229 உரிமை கோரப்படாத உடல்களை பரத்பூரில் உள்ள தேவ்காட் திறந்தவெளிப் பகுதியில் நல்லடக்கம் செய்யும் பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் உறவினர்கள் தங்களின் குடும்பத்தினரை அடையாளம் காணும் வகையில், அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு உடலிலிருந்தும் முறைப்படி டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் உடல்களின் அடையாளக் குறிப்புகள் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு, பிரத்யேக அடையாள எண்களும் வழங்கப்பட்டுப் பாதுகாப்பான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

Read More : குவியும் சடங்களை வைக்க இடமில்லை; அடையாளம் காண்பதிலும் சிக்கல்!. புதிய நெருக்கடி!. களம் இறங்கும் இந்தியா – சீனா குழுக்கள்!

Next Post

நேபாள பெருவெள்ளத்தில் இத்தனை தமிழர்கள் மாயமா? அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த புது தகவலால் அச்சம்..!!

Sat Aug 29 , 2026
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 400 ஆக அதிகரித்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். ஆரம்பக்கட்டத்தில் 103 தமிழர்கள் மட்டுமே சிக்கியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதல் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்தில், சென்னை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த தனியார் பயண முகமைகள் மூலம் 103 பேர் […]
Rajmohan 2026 1

You May Like