தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க் வகை சட்டத்திற்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..
இந்த உத்தரவை எதிர்த்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரியும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது.. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பு “ இந்த விவாகரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு அவசர அவசரமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாநில அரசு பதிலளிக்க கூட அவகாசம் வழங்கப்படவில்லை. விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரிக்க முடியாது.. இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு.. மேலும் நீதிமன்ற நடைமுறைகளையும் சென்னை உயர்நீதிமன்றம் மீறியது..” என்று வாதிட்டது.
இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் உத்தரவை பிறப்பித்தனர்.. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை ஆளுநருக்கு பதில் முதலமைச்சரே நியமிக்க் வகை சட்டத்திற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.. மேலும் இந்த வழக்கை மீண்டும் மெரிட் அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டனர்.. இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உரிய அமர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



