உஷார்.. தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு.. இதை எல்லாம் செய்ய வேண்டாம்..! தமிழக அரசு அட்வைஸ்..!

bird flu tn govt

பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், அங்கிருந்து மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


இந்த சூழலில் சென்னையில் காகங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அங்கு ‘H5N1’ எனப்படும் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பறவை காய்ச்சல் தடுப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.. அதில் பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.. பறவை காய்ச்சல் நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை பறவை காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் ஆகும்..

இருமல், சளி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.. முற்றிலும் சமைக்கப்படாத முட்டை மற்றும் சரியாக சமைக்கப்படாத இறைச்சிகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.. பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், இந்த நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். பறவை காய்ச்சல் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : அனல் பறந்த ஆலோசனை..!! தாக்கலாகிறது தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்..!! என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியாகும்..?

RUPA

Next Post

ரூ.1.50 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை..! விஜய் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

Fri Feb 6 , 2026
கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது. […]
vijay chennai high court income

You May Like