BREAKING | காலையிலேயே அதிர்ச்சி..!! உலகம் முழுவதும் முடங்கிய YouTube மீண்டும் சீரானது..!! ஸ்தம்பிக்கும் இணைய உலகம்..!!

Youtube 2026 1

இன்று காலை முதலே உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இணைய பயனர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், முன்னணி வீடியோ தளமான யூடியூப் (YouTube) திடீரென முடங்கியது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இந்தப் பாதிப்பு எதிரொலித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக பயனர்கள் யூடியூப் செயலியை திறந்தால், முகப்புப் பக்கத்தில் எந்த வீடியோக்களும் தோன்றாமல் ‘பிளாங்க்’ (Blank) ஆக காட்சி அளித்தது. தேடுதல் (Search) வசதியைப் பயன்படுத்தினாலும் ‘Error’ என்றே வருவதால், வீடியோக்களைப் பார்க்க முடியாமல் தவித்தனர்.


இந்தத் தொழில்நுட்பக் கோளாறு எதனால் ஏற்பட்டது? என்பது குறித்து கூகுள் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதையும் அளிக்கவில்லை. சர்வர் (Server) பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட கோழாரா அல்லது சைபர் தாக்குதல் ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விவாதங்கள் எழுந்தன. இதற்கிடையில், இந்த முடக்கம் குறித்து தகவல் அறிய எக்ஸ் (X) தளத்தில் பயனர்கள் குவிந்து வருவதால், #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில மணிநேரங்களாக யூடியூப் தளம் முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் சீரானது. இதற்கான காரணம் குறித்து விரைவில் கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவரா நீங்கள்..? ஆய்வு முடிவில் வெளியான சூப்பர் தகவல்..!!

CHELLA

Next Post

கர்ப்ப காலத்தில் பாரசிட்டமால் மாத்திரை ஆபத்தா..? என்னென்ன பாதிப்புகள் வரும்..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Wed Feb 18 , 2026
கர்ப்ப காலத்தில் ஏற்படும் தலைவலி, காய்ச்சல் அல்லது உடல் வலிகளுக்குப் பெரும்பாலான பெண்கள் பாதுகாப்பான மருந்தாகக் கருதி பாரசிட்டமால் (அசிடமினோஃபென்) மாத்திரைகளை உட்கொள்வது வழக்கம். ஆனால், இது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்ற ஒரு புதிய ஆய்வறிக்கை மருத்துவ உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் (Mount Sinai) மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட 46 வெவ்வேறு […]
pregnancy

You May Like