“பிரதமர் மோடியின் தாராள குணம்”!. 57 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!. உச்சிமுகர்ந்து பாராட்டும் நேபாளம்!.

Nepal praises PM Modi 30kb

600-க்கும் மேற்பட்டோர் பலியான நேபாள பெருவெள்ளப் பேரிடரில், இந்தியாவின் விரைவான உதவிகளை நேபாள அரசு வெகுவாகப் பாராட்டியுள்ளது. நெருக்கடியான இந்த நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ‘பேரன்புடனும், தாராள மனதுடனும்’ செயல்படுவதாக நேபாள நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார்.


நேபாள-திபெத் எல்லையில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மத்திய நேபாளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் என அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

தொடர் மழைக்கு மத்தியிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பேரிடர் பாதிப்புகளில் இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்துப் பேசிய நிதியமைச்சர் வாக்லே, புதன்கிழமை முதல், பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 57.6 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. நேபாள அரசின் கோரிக்கையை ஏற்று, மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுரங்க மீட்பு நிபுணர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட இந்திய சிறப்பு மீட்புக் குழுவும் அங்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

பேரிடர் மீட்புப் பணிகளை நேபாளம் பல்வேறு கட்டங்களாக அணுகி வருவதாகத் தெரிவித்த நிதியமைச்சர் வாக்லே, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதே தற்போதைய முதல் முன்னுரிமை என்றார்.

இந்தியாவுக்கு பாராட்டு: பிற நாடுகளிடம் உதவி கோரப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த வாக்லே, இந்தியாவின் உதவியைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார். “இந்திய அரசும், பிரதமர் மோடியும் மிகவும் தாராள மனதுடன் உதவி வருகின்றனர். 2015-ஆம் ஆண்டு நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், இந்திய அரசின் உதவி மற்றும் தாராள குணம் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், நேபாளத்தின் மறுசீரமைப்புப் பணிகளுக்கும் மிகப்பெரிய அளவிலான உதவிகளை வழங்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறிய வாக்லே, நேபாளத்தின் மற்ற அண்டை நாடுகளும் இதேபோன்ற ஆதரவை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

1newsnationuser5

Next Post

நேபாள பெருவெள்ளம்!. நாட்டின் கட்டமைப்பை சீரமைக்க சுமார் ரூ.40,000 கோடி தேவை!. பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி!

Sun Aug 30 , 2026
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான பெருவெள்ள பாதிப்புகளில் இருந்து மீண்டு, சேதமடைந்த கட்டமைப்புகளை மறுசீரமைக்க சுமார் 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 40,000 கோடி ரூபாய்) வரை தேவைப்படலாம் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே கூறுகையில், “இது முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே. நாட்டின் சேதத்தை முழுமையாகக் கணக்கிடும் பணிகள் இன்னும் தொடர்ந்து […]
nepal death 30kb

You May Like