ரஷ்யாவின் தீவிர தாக்குதல்: உக்ரைனில் 47 ஏவுகணை, 600 டிரோன் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு…!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்றுடன் 1,522வது நாளை எட்டியுள்ளது. இந்த நீண்டகால மோதலில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்த வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


போரின் போது, உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இதற்கிடையில், போரை நிறுத்துவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டதாக கூறப்பட்டாலும், அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதன் காரணமாக மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது உக்ரைனில் உள்ள நிப்ரோ உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறிவைத்து 47 ஏவுகணைகள் மற்றும் சுமார் 600 டிரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யா நடத்திய இந்த தாகுத்தலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணத்திற்காக கவலை வேண்டாம்.. இதைச் செய்தால், ரூ. 68 லட்சம் கிடைக்கும்.. மத்திய அரசின் 'சூப்பர் திட்டம்'..

Sun Apr 26 , 2026
குழந்தைகள் பிறந்த கணம் முதலே, பெற்றோர்கள் அவர்களின் கல்வி, திருமணம் மற்றும் எதிர்கால வாழ்க்கை அமைவது குறித்தே சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். இருப்பினும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொள்ளும்போது, ​​எதிர்காலத்தில் உயர்கல்விக்கான செலவுகள் எதிர்பாராத அளவை எட்டக்கூடும். இத்தகைய சூழலில், கூட்டு வட்டியின் (Compound Interest) ஆற்றலைப் பயன்படுத்தி, சிறிய தொகைகளை மிகப்பெரிய செல்வமாக மாற்றிக்கொள்ளும் வகையில், மத்திய அரசு ‘NPS வாத்ஸல்யா’ (NPS Vatsalya) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது […]
998694 rupees500

You May Like