ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது..! திமுக – தேமுதிக கூட்டணி குறித்து பாஜக விமர்சனம்..!

dmk dmdk bjp 2

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில் முதன்முறையாக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலினை பிரேமலதா நேரில் சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்..


இதை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, பிரேமலதா, சுதிஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய பிரேமலதா “ தேமுதிக திமுக உடன் கூட்டணியை இறுதி செய்துள்ளோம்.. எங்கள் கழக தொண்டர்கள் நிர்வாகிகளின் விருப்பம் திமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது தான்.. கேப்டன் இல்லாத சூழலில் இந்த கூட்டணி உருவாகி உள்ளது. 2016 தேர்தலிலேயே இந்த கூட்டணி அமைய வேண்டியது.. அப்போதே கலைஞர் பழம் நழுவி பாலில் விழப்போகிறது என்று கூறினார்.. 10 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி அமைந்துள்ளது.

திமுக – தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியினர் மிகுந்த சந்தோஷத்துடன் இந்த கூட்டணியை வரவேற்றுள்ளனர்.. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.. எத்தனை தொகுதிகள் என்பது குறித்து குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும்.. அதன்பின்னர் எங்களுக்கு தொகுதிகள் என்பதை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.. மாநிலங்களவை சீட் வழங்கப்படுமா என்பதை எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தி அறிவிப்போம்.. “ என்று தெரிவித்தார்..

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்ததை தமிழக பாஜக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.. அந்த பதிவில் “ தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!” என்று தெரிவித்துள்ளது.

தேமுதிக கட்சியை தொடங்கியதில் இருந்தே விஜயகாந்த் ஒருமுறை கூட திமுக உடன் கூட்டணி வைத்தது இல்லை.. கடந்த 2016-ல் திமுக கூட்டணியில் தேமுதிக இணைய உள்ளதாக கூறப்பட்டது.. ஆனால் அப்போது அது நடக்கவில்லை.. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இணையும் என்று கூறப்பட்ட நிலையில் திமுகவில் இணைந்த இந்த முடிவு தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே வலுவாக இருக்கும் திமுக கூட்டணிக்கு இது வலு சேர்த்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்..

Read More : “தோல்வி அடைய வாழ்த்துகள்..” திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்த நிலையில் இபிஎஸ் பதிவு..!

RUPA

Next Post

Breaking : எம்.ஜி.ஆர் அதிமுக..! புதிய கட்சியை அறிவித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன்..!

Thu Feb 19 , 2026
தமிழ்நாட்டின் பழம்பெரும் அரசியல்வாதிகளில் ஒருவர் பண்ருட்டி ராமச்சந்திரன். இவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்களுடன் பயணித்தவர்.. அதிமுக பிளவுக்கு பின் ஓபிஎஸ்-ன் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் செயல்பட்டு வந்தார்.. இந்த நிலையில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ஒருபுறம் அடையாள அரசியல் ஒருபுறம் கொள்கை அரசியல் சூறாவளி போல் அடித்துள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க […]
panruti ramachandran

You May Like