தினசரி உடற்பயிற்சி மனசோர்வு அபாயத்தை 36 சதவீதம் வரை குறைக்கும்..! ஆய்வில் தகவல்..

உடல் ஆரோக்கியமும் மனநலமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது ஏற்கனவே அறியப்பட்ட நிலையில், சமீபத்திய ஒரு சர்வதேச ஆய்வு இந்த தொடர்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதய–சுவாசத் தகுதி மேம்பட்டவர்களுக்கு மனநோய்கள் மற்றும் மூளை தொடர்பான கோளாறுகள் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் குறைவதாக ஆய்வு தெரிவிக்கிறது.


இந்த ஆய்வு கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட் மற்றும் காஸ்டிலா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்டது. ஆய்வின் முடிவுகள் நேச்சுரல் மெண்டல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. உடற்பயிற்சி அளவை மட்டும் அல்லாமல், உடற்தகுதியின் துல்லியமான அளவீடு மனநலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் ஆகும்.

ஆராய்ச்சியாளர்கள் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 27 நீண்டகால ஆய்வுகளை முறைப்படுத்தப்பட்ட மீளாய்வு மற்றும் மீபகுப்பாய்வு மூலம் ஆய்வு செய்தனர். ஆரம்பத்தில் மனநோய் அல்லது நரம்பியல் கோளாறுகள் இல்லாத நபர்கள் இதில் சேர்க்கப்பட்டு, காலப்போக்கில் அவர்களின் உடல் மற்றும் மனநல மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டன.

உடற்தகுதியை மதிப்பிடுவதற்காக உடற்பயிற்சி சோதனைகள் மற்றும் ஆக்ஸிஜன் நுகர்வு (VO₂ max) போன்ற அளவீடுகள் பயன்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் உடற்தகுதி நிலை மற்றும் மனநோய் அபாயம் இடையிலான தொடர்பு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

முக்கிய கண்டுபிடிப்புகள்: ஆய்வின் முடிவில், இதய–சுவாசத் தகுதி அதிகமாக உள்ள நபர்களுக்கு மனநல கோளாறுகள் குறைவாக இருந்தன.

* மனச்சோர்வு ஏற்படும் அபாயம் 36% குறைவு

* மறதி நோய் (Dementia) அபாயம் 39% குறைவு

* மனநோய் சார்ந்த கோளாறுகள் அபாயம் 29% குறைவு

* பதட்டம் (Anxiety) அபாயம் சுமார் 10% குறைவு (முழு புள்ளிவிவர உறுதி இல்லை)

இந்த அபாயங்களை மதிப்பிட “Hazard Ratio” என்ற புள்ளிவிவர முறை பயன்படுத்தப்பட்டது. இது உடற்தகுதி நிலையை அடிப்படையாக கொண்டு நோய் ஏற்படும் சாத்தியக்கூறை ஒப்பிடும் அறிவியல் முறை ஆகும். ஆய்வில் Schizophrenia, Bipolar disorder, ADHD, OCD, உறக்கக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு மனநல மற்றும் நரம்பியல் கோளாறுகளும் சேர்க்கப்பட்டன. இருப்பினும் சில கோளாறுகளுக்கு போதுமான தரவுகள் இல்லாததால் முழுமையான பகுப்பாய்வு செய்ய முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிய மாற்றங்களே பெரிய தாக்கம்: ஆய்வின் முக்கிய அம்சம் என்னவென்றால், உடற்தகுதியில் ஏற்படும் சிறிய முன்னேற்றங்கள்கூட மனநலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாகும். இதன் மூலம், கடுமையான உடற்பயிற்சி மட்டுமல்லாது, தினசரி நடைபயிற்சி போன்ற சிறிய வாழ்க்கைமுறை மாற்றங்களும் மனநலத்திற்கு உதவக்கூடும் என்பது தெளிவாகிறது.

Read more: ‘இந்தியா மறக்காது..’ பஹல்காம் தாக்குதல் நினைவு தினம்.. ராணுவத்தின் வலுவான செய்தி..!

English Summary

Cardiorespiratory Fitness May Lower Depression Risk by 36%, Study Finds

Next Post

Summer Tips: கோடைக்காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க உதவும் சிறந்த பானங்கள்.. கண்டிப்பா குடிங்க!

Tue Apr 21 , 2026
Summer Tips: Want to stay fresh during the summer? Then definitely drink all these juices!
juice 1

You May Like