வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.. அப்போது “ தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காணாமல் போய் நிறைய நாட்கள் ஆகிவிட்டது.. நமது ஆட்சி அமைந்த பின்னர், குழந்தைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நம்பர் ஒன்,ஆக இருக்கும், சட்டம் ஒழுஙு கடுமையாக இருக்கும்.. கல்லூரிகள், பள்ளிகள் தரமாக இருக்கும். நமது ஆட்சி அமைந்தால், போட்டி தேர்வுகளை எளிதில் சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்படும். பள்ளி திட்டங்களில் அடிப்படை அரசியல் பாடங்கள் சேர்க்கப்படும். தேர்வுகள் இல்லாத செயல்முறை பாடங்கள் கற்பிக்கப்படும்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் சுத்தமான தரமான ரெஸ்ட் ரூம்கள் அமைப்பது உறுதி செய்யப்படும். போதைப் பொருட்கள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பிக்களில் சரி பாதி அளவு பெண்கள் இருப்பார்கள். மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிரசவம் பார்க்கும் வசதியுடன் அமைக்கப்படும்.
பேருந்துகள் வசதிகளே இல்லாத மலைகிராமங்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.. ஆட்டோ, டாக்ஸி, லாரி ஒட்டுநர்களின் நலனுக்காக நல வாரியம் அமைக்கப்படும். தென் தமிழகத்தில் தொழில் வளம் பெருக்க தனி கவனம் செலுத்தப்படும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களின் கருத்துகளை அறிந்து காலத்தின் தேவைக்கேற்ப திட்டங்கள் உருவாக்கப்படும்..
ஸ்டாலின் சார், அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், அந்த பக்கம் யார் சென்றாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார்.. கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு பங்கை கொடுத்து, கல்லாப்பெட்டி கூட்டணியை சேர்த்திருக்கிறார்.. அரதப் பழைய கூட்டணியை வைத்து இனி ஜெயிக்க முடியாது.. ஏனெனில் இது வித்தியாசமான விசில் புரட்சி தேர்தல்.. உங்களோடு நான் இருக்கிறேன்.. என்னோடு நீங்கள் இருக்கிறீர்கள்.. இதற்கு மேல் என்ன வேண்டும்.. வெற்றி நிச்சயம்..” என்று தெரிவித்தார்..
Read More : “இது விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் நடக்கும் போர்.. இந்த தேர்தல் அதிசய தேர்தல்.. ஏன்னா..” விஜய் ஸ்பீச்..!



