சீனையே மாற்றிய காங்கிரஸ்..! திமுக உடன் மட்டுமே பேச்சுவார்த்தை.. விஜய் தலையில் இடியை இறக்கிய செல்வப்பெருந்தகை..!

Selvaperunthagai DMK 1 1

திமுக – காங்கரஸ் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்ததால், கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற குழப்பம் நீடித்தது.. இன்று, திமுகவுடன் காங்கிரஸ் நடத்திய முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.. இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது “ காங்கிரஸ் சார்பில் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளோம்… எங்கள் தேவையை அவர்களிடம் கூறியுள்ளோம்.. அவர்கள் அதனை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.


திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகவும், வெற்றிகரமாகவும் நடந்து கொண்டிருக்கிறது.. 1 ராஜ்ய சபா சீட் கொடுப்பதாக முதல்வர்  ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.. எனவே பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.. எந்த பிரச்சனையும் இல்லை. ஊடகங்களும் கூட்டணியில் பிரச்சனை என்று செய்திகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும்..

இது கொள்கை சார்ந்த கூட்டணி, இயற்கையான கூட்டணி.. நம்பிக்கை உள்ளன.. எனவே ஊடகங்கள் இந்த கூட்டணியை சிதைக்க முயற்சிக்க வேண்டாம்.. இந்த கூட்டணி மதவாதிகளை விரட்டும் கூட்டணி.. ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவை தமிழ்நாட்டில் விடமாட்டோம்.

நாங்கள் திமுக உடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. கிரிஷ் ஜோடங்கரின் கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது.. வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக அவர் கூறவே இல்லை.. அவர் சொல்லாததை செய்தியாக்குகின்றனர்.. ராகுல்காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே திமுக உடன் கூட்டணி நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர்.. காங்கிரஸ் திமுகவை தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை..” என்று தெரிவித்தார்..

Read More : திமுக கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணைந்தது.. ஆனாலும் இந்த சிக்கல் இருக்கு..! ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார்?

RUPA

Next Post

மது அருந்தாவிட்டாலும் கல்லீரல் ஏன் சேதமடைகிறது..? அறிகுறிகள் என்ன..? எப்படி தவிர்ப்பது..?

Sat Feb 28 , 2026
பொதுவாக, மது அருந்துவது கல்லீரலை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது.. இந்த விஷயத்தில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும்.. ஆனால், இப்போதெல்லாம், மது அருந்தாதவர்களிடமும் கல்லீரல் பிரச்சினைகள் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.. அவர்கள் மது அருந்தாவிட்டாலும் கூட.. கல்லீரல் எவ்வாறு சேதமடைகிறது என்று தெரியாததால் பலர் குழப்பமடைகிறார்கள். ஆரம்பத்தில், கல்லீரல் பிரச்சினைகளின் அறிகுறிகள் லேசானவை.. எனவே மக்கள் அவற்றைப் புறக்கணிக்கிறார்கள். பின்னர்.. படிப்படியாக கல்லீரல் சேதமடைகிறது.. அவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்.. […]
liver health 1 1 1

You May Like