“ இன்று மனைவி பற்றி எமோஷ்னலாக பேசி விஜய் அழுவாரு..” தஞ்சை Script இது தானாம்.. லீக் ஆன PR டீம் ஆடியோ..!

vijay emotional sangeetha

தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது.


அதன்படி விஜய் இன்று தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டியில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சைக்கு புறப்பட்டுள்ளார்..

இந்த நிலையில் இன்று தஞ்சையில் தவெக தலைவர் விஜய் என்ன பேசுவார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி கடந்த முறை வேலூர் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் அழுது எமோஷ்னலாக பேசியது போலவே தஞ்சை கூட்டத்திலும் விஜய் கண்கலங்கி பேசுவாராம்..

விவாகரத்து கேட்டு விஜய் மனைவி சங்கீதா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.. விஜய்க்கு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், நடிகையால் தனது குடும்பம் அவமானத்தை சந்தித்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.. இதுகுறித்து விஜய் எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், இன்று இதுகுறித்து விஜய் பேசுவாராம்..

அப்போது கண்கலங்கி உருக்கமாக மனைவி குறித்து பேசுவாராம்.. விஜய் அழும் போது கீழே இருக்கும் பெண்கள், நீங்கள் அழக்கூடாது நாங்கள் உங்களுக்காக இருக்கிறோம் என்று கூறுவார்களாம்.. இதுதொடர்பாக விஜய் PR டீம், சமூக வலைதள பிரபலம் ஒருவரிடம் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

இன்றைய கூட்டத்தில் விஜய் உருக்கமாக பேசுவதும், அவருக்கு சிம்பத்தி கிரியேட் ஆகும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு ட்ரெண்ட் செய்ய வேண்டும் என்று அந்த தொலைபேசி உரையாட்டில் பேசும் நபர் கூறுகிறார்..

விஜய் அழுவது, பெண்கள் சப்போர்ட் செய்வது,அழுவதும் வீடியோவில் இருக்க வேண்டுமாம்.. எப்போதும் போல திமுக செய்யும் சதி என்று கூறி வீடியோ வெளியிட வேண்டும் என்று கூறுகிறார்..

RUPA

Next Post

Flash : விஜய் காரை பின்தொடர்ந்து சென்ற போது அடுத்தடுத்து விபத்து..! தவெகவினர் காயம்..!

Wed Mar 4 , 2026
தவெக தலைவர் விஜய் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பு கூட்டங்களை நடத்தி வருகிறார். கரூர் சம்பவத்திற்கு பின்னர், பொதுமக்கள் சந்திப்பு கூட்டம், நிர்வாகிகள் கூட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி விஜய் இன்று தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டியில் இன்று நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.. இந்த கூட்டத்தில் 4900 நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.. இந்த நிலையில் தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்று […]
tvk vijay car

You May Like