“ விஜய் ஆட்சிக்கு வந்த உடன் கரூர் விஷயத்தில் செந்தில் பாலாஜி ஜெயலுக்கு போவார்..” ஆதவ் அர்ஜுனா பேச்சு..!

aadhav arjuna

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டு, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டும், போதை பொருட்களை தடுக்க தவறியது, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்குவதாக தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அதன்படி சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.. அதில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தவெக ஆட்சி அமைந்த உடன், கரூர் விவகாரத்தில் செந்தில்பாலாஜி உள்ளிட்ட அனைவரும் சிறைக்கு செல்வார்கள் என்று தெரிவித்தார்..

இதுகுறித்து பேசிய அவர் “ எங்கள் தலைவர் மாவட்ட ரீதியாக பயணம் செய்தார்.. ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்கள் தலைவர் விஜய்க்கு இருந்த எழுச்சியை பார்த்து திமுகவினர் பயந்துவிட்டனர்.. கரூரில் ஏதாவது பிரச்சனை செய்ய வேண்டும் என்பதே செந்தில் பாலாஜியின் அஜெண்டா.. கரூரில் மட்டும் தான் பாட்டிலுக்கு பத்து ரூபா என்று பாடும் போது செருப்பு வீசப்பட்டது.. எந்த மாவட்டத்திலும் செருப்பு வீசப்பட்டதாக வரலாறு இல்லை..

ஏனெனின் விஜய் மீது மக்கள் அன்பும் நம்பிக்கையும் வைத்துள்ளனர். கரூரில் மட்டும் எப்படி செருப்பு வந்தது.. செந்தில் பாலாஜி தான் முதல் குற்றவாளி.. செந்தில்பாலாஜிக்கு பயம் வந்துவிட்டது.. என்னை மட்டும் அழைக்கிறீர்கள், அன்பில் மகேஷை ஏன் அழைக்கவில்லை? செந்தில் பாலாஜி அனைவரையும் மாட்டிவிட தயாராகிவிட்டார்.. ஆட்சி மாற்றம் வரும் போது தமிழக காவல்துறை விஜய்யின் கட்டுப்பாட்டில் வரும் போது நீங்கள் எல்லாம் கரூர் விஷயத்தில் ஜெயலுக்கு போவீங்க.. இது நடக்கிறதா இல்லையா என்று பாருங்கள்..

எந்த எதிர்க்கட்சி தலைவரும் திருவாரூரில் நுழையவே முடியாது.. ஏனெனில் கலைஞர் மண் அது.. ஆனால் திருவாரூருக்கு விஜய் செல்ல 4 மணி நேரம் ஆனது. இதனால் தான் திமுகவுக்கு பயம்.. அதனால் கரூரில் பிரச்சனை செய்து விஜய்யை கொலை முயற்சியில் மாட்டிவிட பார்த்தனர்.. இது போன்று பிரச்சனைகள் செய்தால் அரசியலை விட்டு போய்விடுவார் என்று நினைத்து இதை செய்துள்ளனர்..

ஒருவேளை தமிழக அரசு இந்த விஷயத்தை விசாரித்திருந்தால் நான், அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த் உட்பட அனைவரும் இன்று வரை ஜெயிலில் தான் இருந்திருப்போம்..” என்று கூறினார்..

Read More : விஜய்க்கு துணை முதல்வர் பதவி.. NDA கூட்டணியில் தவெகவுக்கு 60 தொகுதிகளா? இபிஎஸ் பரபரப்பு பதில்..!

RUPA

Next Post

தமிழகத்தில் பெட்ரோல் பற்றி பயப்பட வேண்டாம்.. 90 நாட்களுக்கு கையிருப்பு உள்ளது.. வெளியான குட்நியூஸ்..!

Thu Mar 12 , 2026
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் சிலிண்டரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு […]
petrol c1 1

You May Like