நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்கும் விஜய்..? பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க போகிறார்..?

tvk vijay new 2

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.. அதில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. இதையடுத்து இன்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் விஜய் முதலமைச்சராக ஆதரவு அளித்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது..


மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. ஆனால் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை.. எனினும் விஜய் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரி உள்ளார்.. கவர்னரும் அதற்கு அனுமதி அளிப்பார்.. ஆனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சட்டசபையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்..

தவெக பெரும்பான்மைக்கு கூடுதலாக 12 இடங்கள் தேவைப்படுகிறது.. எனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக உள்ளிட்ட கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது..

தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்திக்க தவெக தலைவர் விஜய் தரப்பில் ஏற்கனவே நேரம் கேட்கப்பட்டுள்ளது.. இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோர உள்ளார்.. 2 வாரங்களில் பெரும்பான்மையை நிரூபிப்பதாக கவர்னருக்கு தவெக கடிதம் எழுதி உள்ளது..

இந்த நிலையில் மே 7-ம் தேதி அதாவது நாளை மறு நாள், தவெக தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அவரது பதவியேற்பு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..

RUPA

Next Post

தோல்வி அடைந்தாலும் கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்.. கண்ணீர் விட்டு கதறிய திமுக தொண்டர்கள்.. பொதுமக்கள்..!

Tue May 5 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.. முதல்வர் ஸ்டாலின் இதுவரை 7 முறை தேர்தல் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.. 1989, 1996, 2001, 2006 தேர்தல்களில் போட்டியிட்டு சென்னை […]
stalin kolathur

You May Like