தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றி கழகம் 106 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 76 தொகுதிகளிலும், அதிமுக 54 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் தவெக முதல் முறையாக போட்டியிட்ட நிலையில், 1 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது 1,12,20,014 வாக்குகள் (22.8%) பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கடுத்து திமுக 1,01,34,027 வாக்குகள் (20.8%), அதிமுக 87,72,783 வாக்குகள் (18%), நாம் தமிழர் கட்சி 12,05,039 வாக்குகள் (2.5%) பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் விஜய் வெற்றி பெற்றார்.. 44,928 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.. அதே போல் திருச்சி கிழக்கு தொகுதிகளில் 84,465 வாக்குகள் பெற்று விஜய் வெற்றி பெற்றுள்ளார்.. இரு தொகுதிகளிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது..



