தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. ஆட்சியில் பங்கு என்று மிகப்பெரிய அஸ்திரத்தை விஜய் வீசிய போதிலும் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை..
தவெகவை பயன்படுத்தி சீட் பேரத்தை அதிகப்படுத்திய காங்கிரஸ், திமுக உடன் கூட்டணியை இறுதி செய்துவிட்டது.. இந்த சூழலில் என்.டி.ஏ கூட்டணியில் தவெகவை இழுக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.. முதலில் 45 தொகுதிகள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 51 சீட் வரை ஒதுக்க பாஜக முன் வந்துள்ளது.. மேலும் விஜய்க்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க பாஜக முன்வந்துள்ளது..
எனினும் என்.டி.ஏ கூட்டணியில் இணையலாம் என்று ஒருதரப்பு, கூட்டணி வைத்தால் விஜய்யின் தனித்தன்மையை பாதிக்கும் என்று மற்றொரு தரப்பும் கூறுகிறது.. எனினும் இந்த இரட்டை நிலைப்பாட்டால் விஜய் முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறார்..
இந்த நிலையில் NDA கூட்டணியில் தவெக இணையுமா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ NDA கூட்டணியில் தவெக இணையுமா? இணையாதா என்பது எனக்கு தெரியாது.. நான் டெல்லிக்கு செல்லவில்லை.. என்று கூறினார்.. உடனே செய்தியாளர்கள் புதிய கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த நயினார் “ புதிய கட்சிகள் இணையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “ நடிகர் ரஜினிகாந்த் மீதான ஆதவ் அர்ஜுனா விமர்சனத்தை தவெக தலைவர் விஜய் கண்டிக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். நடிகர் ரஜினிகாந்த் மீதான விமர்சனத்துக்கு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Read More : Flash : குட்நியூஸ்..! தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை.. ஆனால் வெள்ளி விலை ரூ.4,000 உயர்வு..!



