Big News : மெகா இன்பச் செய்தி.. இன்று ஒரே நாளில் ரூ.7,600 குறைந்த தங்கம் விலை..!

gold jewlery

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.7,600 குறைந்துள்ளது.. இன்று காலை ஒரு சவரனுக்கு ரூ.5,360 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.2,240 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,01,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.. நேற்று ஆபரனத்தங்கம் ஒரு கிராம் ரூ.13,620க்கு விற்பனையான நிலையில், இன்று இருமுறை விலை குறைந்து ரூ.12,670க்கு விற்பனை செய்யப்படுகிறது..

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக கடந்த 10 நாட்கள் தங்கம் விலை குறைந்து வந்தது.. குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் ரூ.7000க்கு மேல் தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ. 7,600 குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More : இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்..! மேலும் 2 எல்பிஜி கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வர உள்ளன..!

RUPA

Next Post

பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11.. NDA கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!

Mon Mar 23 , 2026
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, பார்வேர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.. இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் என்.டி.ஏ கூட்டணி தலைவர்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தினார்.. தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகை தந்து […]
eps piyush anbumani ttv nda

You May Like