SIR விவகாரம்; வலுக்கும் போராட்டம்!. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு Z+ பாதுகாப்பு!.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) பணிகள் மற்றும் அதில் எழுந்துள்ள முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் Z+ பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இல்லம், தேர்தல் ஆணைய அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


டெல்லி மற்றும் ஆக்ராவில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரின் வீடுகளுக்கு அருகில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, மத்திய அரசு இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளை உயர்த்தியுள்ளது.

இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “போராட்டக்காரர்கள் அவரது வீட்டைக் கண்டறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்ராவில் உள்ள அவரது குடும்பத்தினரின் வீட்டிற்கு முன்பும் போராட்டம் நடத்தப்பட்டது. அனைத்து அச்சுறுத்தல்களையும் மதிப்பீடு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டியிருந்தது” என்று தெரிவித்தார்.

கடும் போராட்டங்களும் பாதுகாப்பும்:

செப்டம்பர் 27 அன்று டெல்லி மோதி பாக் பகுதியில் உள்ள ஞானேஷ் குமாரின் இல்லத்திற்கு வெளியே இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி அவரது பதவியை ராஜினாமா செய்யக் கோரினர். மேலும், எதிர்க்கட்சியான ‘இந்தியா கூட்டணித் தலைவர்களும் தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமையகமான (நிர்வாச்சன் சதன்) வளாகத்திற்குள் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வளாகத்திற்கு வெளியே விரைவு அதிரடிப் படை (RAF), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) மற்றும் தில்லி காவல்துறையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Z+ பாதுகாப்பின் கீழ், மத்திய ஆயுதப் படைகள் மற்றும் டெல்லி காவல்துறை உட்பட 55-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

தீபாவளிக்கு முன் அதிர்ச்சி!. உலகளவில் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அமேசான்!. இந்தியாவிலும் நேரடி பாதிப்பு!

Thu Oct 8 , 2026
அமேசானின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026’ (Great Indian Festival) விற்பனை தொடங்குவதற்கு சற்று முன்பு, பிரபல இ-காமென்ஸ் நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 1,000 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த புதிய ஆட்குறைப்பு நடவடிக்கையால் இந்தியாவிலும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள சில்லறை விற்பனைப் பிரிவு ஊழியர்களை இந்த வேலை இழப்பு பாதித்துள்ளது. குறிப்பாக, நிறுவனத்தின் முக்கிய […]
layoff amazon

You May Like