“ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு இபிஎஸ் சென்றுவிட்டார்..” அமைச்சர் சிவசங்கர் பதிலடி..!

sivasankar

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. அந்த வகையில் இபிஎஸ் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திமுக கூட்டணி கட்சிகளை அடிமைக் கட்சிகள் என்று விமர்சித்துள்ளார்..


இந்த நிலையில் இபிஎஸ்-க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.. செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என்பது அனைவருக்கும் தெரியும்.. நல்லுறவோடு இருக்கும் திமுக கூட்டணியை இபிஎஸ் விமர்சித்திருக்கிறார்..

அதிமுக கூட்டணி பாஜகவுக்கு கடந்த முறையை விட அதிக இடங்களை விட இபிஎஸ் கொடுத்திருக்கிறார். மேலும் தாமரை சின்னத்தில் இன்னும் கூடுதல் இடங்களில் பல கட்சிகள் போட்டியிடும் நிலை வந்திருக்கிறது.. தமாக, இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகள் எல்லாம் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன..

மகாராஷ்டிரா சிவசேனா சந்தித்த நிலை, பீகாரில் நிதிஷ்குமார் சந்தித்த நிலை, பாஜகவால் விழுங்கப்பட்ட மாநில கட்சிகளின் நிலை தான் அதிமுகவுக்கு வரும்.. அவர் என்ன தான் மறைக்க நினைத்தாலும் அவரின் ஒவ்வொரு அறிவிப்புக்கும் பின்னால் அமித்ஷா தான் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.. அமித்ஷா கொடுக்கும் ஸ்கிரிப்டை அப்படியே படிக்கிறார்..

மோடியா, லேடியா என்று கேட்டு பாஜகவுக்கு சவால் விடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு மோடி தான் எல்லாம் என்று சொல்ல ஜெயலலிதாவின் ஆன்மாவை சாகடிக்கும் அளவுக்கு இபிஎஸ் சென்றுவிட்டார்..

டெல்லிக்கு அடிபணியமாட்டோம் என்று சொல்லிக்கொண்டே மீண்டும் மீண்டும் அடிபணிந்து கொண்டிருக்கிறார்..

திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டு, அவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் பேசி கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.. இப்படி ஒரு மனம் ஒத்த கூட்டணி திமுக கூட்டணி அமைந்திருக்கிறது.. என்.டி.ஏ கூட்டணி என்பது அமித்ஷாவின் கட்டளைக்கு ஏற்ப அமைந்துள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார்..” என்று தெரிவித்தார்..

Read More : இபிஎஸ் முடிவால் அப்செட்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லையாம்.. என்ன காரணம்..? பரபர தகவல்கள்..!

RUPA

Next Post

இந்தியாவுக்கு ஹார்முஸ் திறக்கப்படும்.. 5 நட்பு நாடுகளுக்கு தடை இல்லை.. ஈரான் சொன்ன குட்நியூஸ்..!

Thu Mar 26 , 2026
நடந்து வரும் ஈரான்-அமெரிக்கப் போருக்கு மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ள வளைகுடாவின் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணையை, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சீனா மற்றும் ரஷ்யா போன்ற ‘நட்பு நாடுகள்’ பயன்படுத்த அனுமதித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். மும்பையில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் ஒரு பதிவில், “ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி: சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகள் […]
iran 3

You May Like