பாஜக வேட்பாளர் தேர்வில் இழுபறி.. நாளை சென்னையில் பிரதமர் ஆலோசனை.. அண்ணாமலைக்கு அழைப்பு..!

Bjp Annamalai

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன..


இந்த சூழலில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் பாஜகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி உள்ளது. தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியும் இதுவரை பாஜக வேட்பாளர் தேர்வில் சமூக முடிவு எட்டப்படவில்லை என்றே தெரிகிறது..

எனினும் பாஜகவில் இதுவரை இப்படி நடந்தது இல்லை.. இதுகுறித்து தேசிய தலைமைக்கு தகவல்கள் சென்ற நிலையில், வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சமீபத்தில் சென்னை வந்து சென்றார்.. அப்போது ஒரு உத்தேச பட்டியலை தயார் செய்து அவர் டெல்லிக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது..

டெல்லியில் இந்த பட்டியல் பரிசீலிக்கப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.. இந்த பட்டியலுடனி ந்று பியூஷ் கோயல் இன்று மாலை சென்னை வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.. இதிலும் மாநில நிர்வாகிகள் மாற்றத்தை வலியுறுத்தினால், பட்டியல் இரவு அல்லது நாளை வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இதனிடையே புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று வருகிறார்.. இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்.. பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமான நிலையத்திற்கு மாலை 4.15 மணிக்கு வருகிறார்.. அங்கு திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டனி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்..

ரோடுஷோவை முடித்து விட்டு மீண்டும் புதுச்சேரி விமான நிலையத்திற்கு திரும்பும் அவர் மாலை 5.50 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மீண்டும் சென்னை வரும் பிரதமர் அங்கு தங்குகிறார்..

இந்த நிலையில் நாளை பிரதமர் மோடி தலைமையில் பாஜக மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறூம் கூட்டத்தில் பாஜக முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.. இந்த கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..

பிரதமர் நடத்தும் கூட்டத்தில் முன்னாள் தலைவர் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க என கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.. கேரளாவில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அண்ணாமலை இன்று இரவு சென்னை திரும்புகிறார்..

அண்ணாமலை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சி மேலிடம் வலியுறுத்துவதாகவும், ஆனால் அவர் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப தெரிவிப்பதாகவும் பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது..

இந்த சூழ்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று அண்ணாமலை முடிவெடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.. இந்த சூழலில் பிரதமர் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்பது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியது..

Read More : அரசியல் வேறு.. சினிமா வேறு.. அந்த நடிகரின் நிலமைதான் விஜய்க்கு வரும்!! முத்தரசன் விமர்சனம்

RUPA

Next Post

இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மாரடைப்பு மரணங்கள்..! இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் இதுதான்..!

Fri Apr 3 , 2026
இதயத் தமனிகளில் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் படிவதால், ரத்த ஓட்டம் சீராக நடைபெறுவதில்லை. இதயத்திற்குப் போதுமான இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காததால், இது மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மருத்துவத் துறையில், இந்நிலை ‘கரோனரி தமனி நோய்’ (Coronary Artery Disease) என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், இதயத்தில் ஏற்படும் இந்த அடைப்பு திடீரென்று உருவாவதில்லை; நீண்டகால உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாகவே இது ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினையின் […]
heart attack 1

You May Like