BREAKING| 27 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்! அப்போ மேலூர்..?

congresscandidatelist down 1775132765

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியிலும் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்துவிட்டது. போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகிறது. திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடாமல் இருந்து வந்தது.


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், வேளச்சேரி, ஊத்தங்கரை, துறையூர், கவுண்டம்பாளையம், ஆத்தூர், பென்னாகரம், சிங்காநல்லூர், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஏப்ரல் 6ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 27 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவில்லை. காங்கிரஸ் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு..

ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை
சோளிங்கர் – முனிரத்னம்
விளவங்கோடு – பிரவீன்
கிள்ளியூர் – ராஜேஷ்குமார்
ஊத்தங்கரை – குப்புசாமி
ஸ்ரீவைகுண்டம் – ஊர்வசி அமிர்தராஜ்
அறந்தாங்கி – ராமசந்திரன்
காரைக்குடி – எஸ்.மாங்குடி
பொன்னேரி – துரை சந்திர சேகர்
வேலச்சேரி – ஹச்சன் மவுலானா
திருவாடானை – ராம.கருமாணிக்கம்
பொன்னகரம் – ஜி.கே.எம்.தமிழ்குமரன்
கவுண்டம்பாளையம் – சூர்யபிரகாஷ்
சிங்காநல்லூர் – ஸ்ரீ நிதி நாயுடு
துறையூர் – விச்சு லெனின் பிரசாத்
கடலூர் – சந்திரசேகரன்
மயிலாடுதுறை – ஜமால் யூனுஷ் முகமது
கிருஷ்ணகிரி – செல்வக்குமார்
ஆத்தூர்(சேலம்) – அர்த்தநாரி
ஈரோடு கிழக்கு – கோபிநாத் பழனியப்பன்
உதகை – ராமசந்திரன்
நாங்குநேரி – ரூபி மனோகரன்
கிள்ளியூர் – ராஜேஷ்குமார்
குளச்சல் – தாரகை கத்பட்
சங்கரன் கோவில் – சங்கை கனேசன்
சிவகாசி – கனேசன் அஷோக்
உசிலம்பட்டி – சரவண குமார்

Read more: சுக்கிரன் – சந்திரன் சேர்க்கை: இரு கோள்களின் அரிய சங்கமம்… இந்த ராசிகளுக்கு எதிர்பாராத பண வரவு!

English Summary

Congress releases list of candidates for 27 constituencies!

Next Post

வேட்பு மனுவிலேயே இவ்வளவு சிக்கலா..? 3 நாட்களில் வயதை குறைத்த விஜய்..! புதிய சர்ச்சை..!

Fri Apr 3 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. கூட்டணி தொகுதி பங்கீடு முடிந்து அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அந்த வகையில் தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. விஜய் பெரம்பூர், திருச்சி […]
vijay nomination

You May Like