வெளியில் சென்று உடற்பயிற்சி செய்ய முடியாத சூழலில், பலர் வீட்டிலேயே நடைப்பயிற்சி மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொட்டைமாடி அல்லது வீட்டின் முற்றத்தில் “8” வடிவத்தில் நடக்கும் நடைப்பயிற்சி தற்போது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எளிதாக மேற்கொள்ளக்கூடிய இந்த “8 வடிவ நடைப்பயிற்சி” உடல்நலத்திற்கு பல நன்மைகளை அளிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது குறித்தும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் பார்போம்.
எப்படி செய்ய வேண்டும்?
* இந்த பயிற்சிக்காக 6 அடி அகலம், 10 அடி நீளத்தில் “8” வடிவம் வரைய வேண்டும்.
* வடக்கு முதல் தெற்கு திசை நோக்கி நடந்து, பின்னர் திரும்பி தெற்கு முதல் வடக்கு நோக்கி நடக்க வேண்டும்
* ஒவ்வொரு திசையிலும் 15 நிமிடம் வீதம், மொத்தம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்
* நடைப்பயிற்சியின் போது கவனம் முழுவதும் அந்த “8” வடிவத்தில் இருக்க வேண்டும். பேசாமல், சீரான இடைவெளியில் நடப்பது அவசியம் என கூறப்படுகிறது.
8 வடிவ பயிற்சியின் நன்மைகள்:
வீட்டிலேயே எளிதாக மேற்கொள்ளப்படும் “8 வடிவ நடைப்பயிற்சி” பார்வை திறனை மேம்படுத்தும் திறன் கொண்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பயிற்சியில் வரையப்பட்டுள்ள “8” வடிவ கோடுகளை கூர்ந்து கவனித்தபடி நடப்பதால், கண்களின் கருவிழிகள் இடம் மாற்றி அசைவதுடன், கண்களில் ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. இதன் மூலம் பார்வை தொடர்பான சில பிரச்சினைகள் குறைய உதவலாம் என கூறப்படுகிறது.
“8 வடிவ நடைப்பயிற்சி” மேற்கொள்ளும்போது வெறும் காலில் நடப்பது உடல்நலத்திற்கு கூடுதல் பலன்களை வழங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முறையில் நடப்பதால் பாதத்தின் மையப்பகுதியில் அழுத்தம் சீராகப் பகிரப்படும். இதன் மூலம் உடலின் உள்ளுறுப்புகள் சுறுசுறுப்பாக செயல்பட உதவுவதுடன், நோய் எதிர்ப்பு திறனும் மேம்பட்டு பல்வேறு நோய்கள் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சுவாச தொடர்பான பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்தால், மூச்சு விடும் முறை சீராகி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சளி, இருமல் போன்ற சுவாச பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு “8 வடிவ நடைப்பயிற்சி” பயனளிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது சுவாசிக்கும் திறன் மேம்பட்டு, உடலில் ஆக்சிஜன் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக நுரையீரலில் தேங்கியுள்ள சளி வெளியேற உதவுவதுடன், உடலின் மொத்த ஆற்றலும் உயர்வதாக கூறப்படுகிறது.
தினசரி இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வதால் தலைவலி, உடல்வலி, முழங்கால் மற்றும் குதிகால் வலி, பாத வெடிப்பு போன்ற பிரச்சினைகள் குறைய உதவும். மேலும் செரிமான கோளாறு, மலச்சிக்கல், உடல் பருமன், தைராய்டு, தூக்கமின்மை, ஆஸ்துமா, முதுகுவலி, கழுத்துவலி உள்ளிட்ட பல்வேறு உடல் நலப் பிரச்சினைகளுக்கும் நிவாரணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனுடன், சிறுநீரக செயல்பாடுகளும் மேம்பட உதவக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பயிற்சியை காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து மேற்கொண்டால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதுடன், ரத்த அழுத்தத்தையும் குறைக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
எப்போது செய்ய வேண்டும்? “8 வடிவ நடைப்பயிற்சி” காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மேற்கொண்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே நேரத்தில், அறுவை சிகிச்சை செய்தவர்கள் குறைந்தது 6 மாதங்கள் வரை இந்த பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். அதன் பின்னர் மருத்துவரின் ஆலோசனை பெற்றே தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. இதயம், நீரிழிவு, நரம்பு கோளாறு, பக்கவாதம், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் கட்டாயமாக மருத்துவ அனுமதி பெற்றே இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
தினசரி இந்த நடைப்பயிற்சியை செய்து வந்தால், நீண்டகாலமாக தொல்லை தரும் பல்வேறு நோய்கள் குறைய உதவுவதுடன், பாதங்களும் கால்களும் வலுப்பெறும். மேலும் சுவாச கோளாறுகள் குறைந்து, உடலின் செயல்திறன் மேம்படும். காது கேட்கும் திறன் கூட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், முதுமையை தள்ளிப்போட்டு இளமையுடன் சுறுசுறுப்பாக வாழ உதவும் பயிற்சியாகவும் இது கருதப்படுகிறது.
Read more: கோடை காலத்தில் அசைவம் சாப்பிடலாமா..? எதை தவிர்க்கனும்..? மருத்துவர்கள் விளக்கம்!



