fbpx

இளம் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய இருவர் கைது.! சைபர் கிரைம் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை.!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத இரு நபர்களுடன் பழகி வந்துள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி மிரட்டி உள்ளனர். கலக்கமடைந்த அந்தப் பெண் உடனே புதுச்சேரியில் உள்ள சைபர் கிரைம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இது குறித்து புகார் அளித்தார்.

பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள் சென்னை மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary: Pondicherry woman has been harassed by 2 men in Instagram. They were arrested by cyber crime officials for sending obscene messages and pictures to her.

Read more: https://1newsnation.com/a-man-was-murdered-by-a-woman-and-her-lover-for-asking-to-repay-the-debt/

Next Post

ELECTION 2024| '5' மாநிலங்களில் களம் இறங்கும் விசிக.! தனிச் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு.!

Tue Feb 20 , 2024
தமிழகத்தின் முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருப்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி. அந்தக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக தொல் திருமாவளவன் இருந்து வருகிறார். வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடம் பெற்று இருக்கிறது. இது தொடர்பாக தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் குழு உடன் விசிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வர இருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் […]

You May Like