நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பநிலையால், காலநிலையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதனால்தான் கடுமையான வெப்பத்தாக்குதல், பருவம் தவறிய மழை மற்றும் வெள்ளம் போன்றவை ஏற்படுகின்றன. வரும் நாட்களில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானால் அதில் ஆச்சரியமில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறிப்பாக, ஏசிகளின் பயன்பாடு அதிகரிப்பதும் காலநிலை மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இப்போது, ஏசி காற்றினால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.
சருமம் வறண்டு போகிறது: குளிர்சாதன இயந்திரங்கள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்குகின்றன. இதனால் கண்களில் வறட்சி மற்றும் எரிச்சல் ஏற்படலாம். சருமமும் வறண்டு எரிச்சலடையக்கூடும். இது மிகவும் அசௌகரியமாக இருப்பதுடன், தூங்குவதையும் கடினமாக்கும். குளிர் வெப்பநிலை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மெதுவாக்குவதால், அஜீரணம் மற்றும் அதிகரித்த சோர்வு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம்.
நீரிழப்பு: குளிரூட்டப்பட்ட காற்றில் உள்ள குறைந்த ஈரப்பதம் காரணமாக, நமக்குத் தெரியாமலேயே உடலில் நீர்ச்சத்து குறைகிறது. குளிர் காலநிலையால் தண்ணீர் குடிப்பதைப் பற்றியே நினைக்கத் தோன்றுவதில்லை. இது நீர்ச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
சிறு குழந்தைகளிடம் கவனமாக இருங்கள்: ஏசிகளை எப்போதும் 25-27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பச்சிளம் குழந்தைகளை ஏசியின் நேரடிக் காற்றுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் ஆபத்து: குளிரூட்டியைத் தவறாமல் சுத்தம் செய்யாவிட்டால், அது கண்ணுக்குத் தெரியாத தூசியை வெளியிடுகிறது. அதில் பல்வேறு பாக்டீரியாக்களும் வைரஸ்களும் உள்ளன. இவை ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.
Read more: “ஸ்டாலினுக்கும் உதயநிதிக்கும் இடையே தான் உண்மையான போட்டியே..!” பாஜக தேசிய தலைவர் சொன்ன மேட்டர்!



