திருப்பூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கபப்டும் என்று அறிவித்தார்..
விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள்
நெசவாளர்களின் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்..
கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும்.
நெசவாளர்கள் முதியோர்களின் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும்.
நெசவாளர்களுக்கு வழங்கும் நூல், சாயம் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்படும்..
கைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 500 யூனிட்களாகவும், விசைத்தறிகளுக்கான இலவச மின்சாரம் 1500 யூனிட்களாகவும் உயர்த்தப்படும்.
தவெக அரசில் அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
இந்தியாவிலேயே அதிகமான சிறு குறு நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.. ஆனால் சிறு குறு நிறுவனங்கள் அதிகமாக மூடப்பட்டதில் தமிழ்நாடு 2-வது இடம்.. இந்த சாதனையை செய்தது திமுக அரசு.
நெருக்கடியில் உள்ள சிறு குறு தொழிலாளர்களை பாதுகாக்க ரூ.15,000 கோடி பண்ட் உருவாக்கப்படும்..
சிறு, குறு தொழில்கள் மூடப்படுவதற்கான காரணமான பீக் ஹவர்ஸ் மின் கட்டணத்தை நிறுத்திவைப்போம்..
விரிவான ஆய்வுக்கு பின்னர் மின் கட்டணம் முறைப்படுத்தப்படும்
சிறு குறு தொழில்களை நவீனமயமாக்க யூனிட்டுக்கு 50 லட்சம் வரை நேரடி மூலதன மானியத்தை வழங்குவோம்.
5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள் பெற்ற பயிர் கடன் 50% தள்ளுபடி செய்யப்படும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் பயிர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரத்தை தவெக அரசு முடிவுக்கு கொண்டு வரும்..
ஒப்பந்தம் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்கள் செவிலியர்களின் வேலை நிரந்தரமாக்கப்படும்
காவலர்களின் அடிப்படை ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தப்படும்.
காவலர்களுக்கு வாரந்தோறும் ஓய்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.. அவர்களுக்கு தனி ஓய்வறை அமைக்கப்படும்.
எனவே உங்க அண்ணன், உங்க தம்பி, உங்க விஜய்க்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்க.. இது சாதாரன தேர்தல் இல்லை.. விசில் புரட்சி தேர்தல்.. ஏப்ரல் 23-ம் தேதி அன்று அனைவரும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..
Read More : தவெக தேர்தல் அறிக்கை 16-ம் தேதி வெளியிடப்படும்.. விஜய் அறிவிப்பு..!



