“தம்பி.. ரொம்ப ஆட்டம் போடாத.. வாழ்க்கையை தொலைத்துவிடுவாய்..” செந்தில் பாலாஜிக்கு இபிஎஸ் எச்சரிக்கை..!

eps senthil balaji

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது.. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேற்று கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்..


இதுகுறித்து பேசிய இபிஎஸ் ” இங்கிருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எந்த இலாகா கொடுத்தாலும் அந்த இலாவில் ஊழல் செய்வது தான் தொடர்கதை.. அந்த இலாகவில் என்னென்ன ஆட்டைய போடலாம் என்று சிந்திப்பவர்.. போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, கலால் என எந்த இலாகா கொடுத்தாலும் அந்த இலாகாவில் கொள்ளையடிப்பவர் தான் செந்தில் பாலாஜி.. மின்சாரத்துறை, போக்குவரத்து துறை, டாஸ்மாக என பல துறைகளில் செந்தில் பாலாஜி மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது..

தம்பி.. ரொம்ப ஆட்டம் போடாதே.. ஆட்டம் போட்டால் இருக்கும் இடம் தெரியாது.. தம்பி.. திரு. ஸ்டாலின் உன்னை வைத்து வித்தை வைத்து வித்தைக்காட்டி கொண்டிருக்கிறார்.. மயங்கிவிடாதே.. ஏற்கனவே உன் நெஞ்சை பொளந்துவிட்டார்கள்.. 453 நாள் சிறையில் இருந்ததை மறந்துவிடாதே.. இத்தனை திமுகக்காரர்கள் இருக்கும் போது ஏன் உன்னை தேர்ந்தெடுத்து கொள்ளையடிக்க பயன்படுத்துகின்றனர்.. சிந்தித்து பார்.. வாழ்க்கையை தொலைத்துவிடாதே..

ஏனெனில் கொங்கு நாடு செல்வாக்கு மிக்க நாடு.. கொங்கு நாட்டு மக்கள் நாட்டு மக்களுக்காக உழைக்கும் மக்கள்.. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்று பிறந்த மக்கள் கொங்கு நாட்டு மக்கள்.. அப்படி இந்த மண்ணில் பிறந்துவிட்டு, தீயவர்களோடு தீய செயல்களை செய்யாதே.. இனிமேலும் அவர்களோடு சேர்ந்து தீய விஷயங்களை செய்தால் அவர்களை உன்னை காப்பாற்ற மாட்டார்கள்.. நடு ரோட்டில் விட்டுவிடுவார்கள்.

கரூரில் இருந்த கே.சி. பழனிசாமியின் நிலைமை என்ன..? அவரை விடவா இவர் செல்வாக்கு மிக்கவர்.. அவர் உழைத்து வாழ்ந்தார்.. அவருக்கே இந்த நிலைமை.. செந்தில் பாலாஜி எப்படி வளர்ந்தார் என்பது நாட்டு மக்களுக்கும் தெரியும்.. கரூர் மக்களுக்கும் தெரியும்..” என்று தெரிவித்தார்..

Read More : ” தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறியது தான் கேவலம்..” இபிஎஸ் பேச்சுக்கு ஸ்டாலின் பதிலடி..!

RUPA

Next Post

மரணத்திற்கு முன் நாம் காணும் கனவுகள்: மனித மனத்தை ஆராயும் புதிய ஆய்வு.. வியக்க வைக்கும் தகவல்கள்..!

Mon Apr 20 , 2026
வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது மனதில் என்ன நடக்கிறது என்பது, நீண்ட காலமாகவே ஆர்வமும் உணர்ச்சியும் நிறைந்த ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. ஒரு புதிய ஆய்வு இப்போது இந்த ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது; பலரும் தங்கள் இறுதி நாட்களில் ஒரே மாதிரியான கனவுகளையும் தரிசனங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அது குறிப்பிடுகிறது. இந்தத் தருணங்கள் ஆறுதலையும், ஒரு நிறைவு உணர்வையும், சில சமயங்களில் அச்சத்தையும் […]
dream human mind

You May Like