ஓசூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.. ஓசூர், பர்கூர், தளி, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி மற்றும் ஊத்தங்கரை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்..
அப்போது தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றிய கெத்தோடு பிரச்சாரம் செய்கிறேன் என்று முதல்வர் கூறினார்.. தொடர்ந்து பேசிய அவர் ” நேற்று தமிழ்நாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரர் ராகுல்காந்தி, ஸ்டாலினை மோடியால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறினார்.. நாளை நான் சென்னையில் பிரச்சாரம் செய்கிறேன்.. ராகுல்காந்தி குமரியில் பிரச்சாரம் செய்கிறார்.. ராகுலும் நானும் திமுக கூட்டணி வெற்றியை உறுதி செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்.” என்று கூறினார்..
தொடர்ந்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த அவர், ஓசூரில் திமுக அரசு செய்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்..
மேலும் ” தமிழ்நாட்டு உரிமைகளுக்காக பாஜகவிடம் குரல் கொடுக்க வக்கில்லாத பழனிசாமி, நான் காரில் போகும் போது கிரிக்கெட் பார்த்தது தப்பு என்று கூறியிருக்கிறார்.. பழனிசாமி அவர்களே, காரில் போகும் போது கர்ச்சீப் வைத்து முகத்தை மூடிக் கொண்டு போனீர்களே அது தான் கேவலம்..
ஒரு முதலமைச்சர் கிரிக்கெட் பார்க்கலாமா என்று பழனிசாமி கேட்டிருக்கிறார்.. முதலமைச்சர் கிரிக்கெட் பார்ப்பது தப்பு இல்லை.. முதலமைச்சராக இருந்து கொண்டு, தூத்துக்குடியில் 13 அப்பாவிகளை சுட்டுக் கொன்றதை டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று வெட்கமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னீர்களே.. அது தான் மிகப்பெரிய தப்பு.. அது தான் கேவலம்..” என்று தெரிவித்தார்..
Read More : தேவாலயத்தில் முழங்காலிட்ட படியே பிராத்தனை செய்த விஜய்..! திருச்சி ரோட் ஷோ நடுவே வேண்டுதல்..!



