தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை முதலே அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகிறார்கள். அதன்படி முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையி உள்ள SIET கல்லூரியில் குடும்பத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என பேட்டி அளித்தார்.
நடிகர் அஜித் குமார் திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்தார். தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி மேல் நிலைப்பள்ளியில் பிரேமலதா விஜயகாந்த் தனது வாக்கை செலுத்தினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது வாக்கை செலுத்தினார்.
தொடர்ந்து சீமான், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் தங்களுக்கான வாக்குச்சாவடிக்கு சென்று வாக்கை பதிவு செய்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் வந்து வாக்கை பதிவு செய்தார். பிரபல இசையமைப்பாளர் அனிருத், ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள செயின்ட் பிரான்சிஸ் சேவியர் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.



