தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் மோதுவைத்தால் பெரும் எதிர்பார்ப்பு மக்களிடையே கிளம்பியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 4023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதில் 3579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
காலை 7 மணி முதலே அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் வாக்கு செலுத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். இந்த நிலையில் வாக்குப்பதிவை 2 மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
Read more: ஜனநாயக கடமையாற்றினார் தவெக தலைவர் விஜய்.. ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு..!



