நெல்லை நாங்குநேரில் பெரும்பத்து கிராமத்தில் 4 மணி நேரம் ஆகியும் மக்கள் வாக்களிக்க வரவில்லை. இரட்டைக் கொலைக்கு நீதி கேட்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.. பொதுமக்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்..
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பலரும் வாக்குப்பதிவு செய்தனர்.. நடிகர்கள் அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, கட்டுப்பாட்டு அறைகள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த நிலையில், நெல்லை நாங்குநேரில் பெரும்பத்து கிராமத்தில் 4 மணி நேரம் ஆகியும் மக்கள் வாக்களிக்க வரவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
கிருஷ்ணன் புதூர் கிராமத்தை சேர்ந்த சீலா என்பவருகு பெரும்பத்து கிராமத்தில் வாக்கு இருந்த நிலையில் அவர் மட்டும் அங்கு வாக்களித்தார். வாக்கு செலுத்துவதின் முக்கியதுவம் குறித்து காவல்துறையினர் அங்குள்ள மக்களுக்கு எடுத்துரைத்தனர். இருப்பினும் தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். வாக்குச்சாவடி மையம் பொதுமக்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Read more: கீழே கிடந்த செல்போனை உரியவரிடம் எடுத்து கொடுத்த விஜய்.. வாக்குச்சாவடியில் நடந்த சுவாரஸ்யம்..!



