விஜய் அடுத்த MGR..? தமிழகத்தை அதிர வைத்த ‘Axis My India’ கருத்துக்கணிப்பு..! தவெக ஆட்சி அமைக்குமா..?

vijay 1

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. மேலும் தேர்தல் களத்தில் புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.. என்பதும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.. குறிப்பாக விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார்? விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லை அதிமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளது..


இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.. இந்த முடிவுகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்திருந்தன..

ஆனால் ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.. திமுக கூட்டணி 91 -110 தொகுதிகளில் வெற்றி பெற்றும் என்றும், அதிமுக கூட்டணி 22-32 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது..

விஜய்யின் தவெக 98-120 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.. நாம் தமிழர் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எந்த தொகுதியிலும் வெற்றி பெறாது என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

வாக்கு சதவீத அடிப்படையில் திமுக, தவெக இரண்டு கட்சிகளும் 35% வாக்கு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.. அதிமுக 23% வாக்கு பெறுவார்கள் என்றும் ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தவெக ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ள ஒரே கணிப்பு இது தான்.. தவெகவின் பின்னால் ஒரு வலுவான இளைஞர் அலை இருப்பதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன:

முதல் முறையாக வாக்களிப்போர் (18–19 வயதினர்) மத்தியில் 68% ஆதரவு தவெகவுக்கு உள்ளது.. 20–29 வயதினர் மத்தியில் 59% ஆதரவு அக்கட்சிக்கு உள்ளது..
30–39 வயதினர் பிரிவில் 45% ஆதரவு இருக்கிறது..

மாணவர் சமூகம், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் எனப் பல தரப்பினரிடமிருந்தும் தவெகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது..

முதலமைச்சர் வேட்பாளர் விருப்பத்தில் விஜய்க்கு ஆதரவாக 37 சதவீத மக்களும், மு.க ஸ்டாலினுக்கு ஆதரவாக 35% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்..

இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி சமூகங்கள், சிறுபான்மை வாக்காளர்கள், மற்றும் நகர்ப்புற, கிராமப்புறப் பிரிவுகள் என அனைத்திலும் தவெகவுக்கு ஆதரவு பெருகி உள்ளது.

தவெகவின் பலம் நகர்ப்புறத் தொகுதிகளில் மிகவும் வெளிப்படையாகத் தெரிந்தாலும், அது கிராமப்புறங்களிலும் செல்வாக்கு பெற்று வருகிறது என்று அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்

Read More : Breaking : தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைக்கும்.. அப்ப தவெக..? எக்ஸிட் போல் முடிவுகளில் ட்விஸ்ட்..!

RUPA

Next Post

வாகன ஓட்டிகளுக்கு குட்நியூஸ்..! E100 பெட்ரோல் மூலம் எரிபொருள் செலவை குறைக்கலாம்..!

Thu Apr 30 , 2026
வெளிநாட்டு கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்க மத்திய அரசு தற்போது உறுதியாக உள்ளது. மக்கள் கூடிய விரைவில் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு மாற வேண்டும் என்று அரசு விரும்புகிறது. இது பெட்ரோல் நுகர்வைக் குறைக்கும். இந்தியா இனி ரஷ்யா, அமெரிக்கா அல்லது வளைகுடா நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. எத்தனால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யக்கூடியது என்பதால், இது ஒரு சிறந்த தேர்வாக அமையும். இந்த திசையில் ஒரு நடவடிக்கையாக, E100 பெட்ரோலுக்கான […]
Petrol Pump 1 1

You May Like