“அடுத்தது அதிமுக ஆட்சி தான்..” இபிஎஸ் அடுக்கிய 3 முக்கிய காரணங்கள்..! உற்சாகத்தில் தொண்டர்கள்..!

Edappadi Palanisamy EPS 2026

சமீபத்தில் வெளியான எக்ஸிட் போல் முடிவுகள் பெரும்பாலும் திமுகவுக்கு சாதகமாக உள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களுடன் ரகசியமாக சில கருத்துகளை பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, இந்த எக்சிட் போல் கணிப்புகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், மக்கள் ஏன் திமுக ஆட்சியை மாற்ற நினைக்கிறார்கள் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களையும் அவர் விளக்கமாக கூறியதாக கூறப்படுகிறது.


தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலான நிறுவனங்கள் திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அதிகம் என்று தெரிவித்துள்ளன.. அதேசமயம், ஒரு நிறுவனம் அதிமுக முன்னிலை பெறும் எனவும், மற்றொரு நிறுவனம் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்கும் எனவும் கணித்துள்ளன.

இந்த கணிப்புகள் வெளியான பின்னர் அதிமுக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர். அப்போது எக்சிட் போல் முடிவுகள் குறித்த கேள்விகள் அதிகமாக எழுந்ததாக தெரிகிறது. “மீண்டும் திமுக ஆட்சியா?” என்ற கேள்வியை கவலை உடன் அதிகமாக முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, எப்போதும் போல அமைதியாகவும் சிரித்த முகத்துடனும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்ற. “ஒப்பீனியன் போல், எக்சிட் போல் போன்றவற்றில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை. அதை வைத்து முடிவுகள் எடுக்க வேண்டாம். கடந்த சில மாதங்களாக திமுகவுக்கு சாதகமான ஒரு சூழலை சில ஊடகங்கள் உருவாக்க முயற்சி செய்துள்ளன. அதேபோலத்தான் இந்த எக்சிட் போல் விஷயத்தையும் பார்க்க வேண்டும்..

ஒரு நிறுவனம் அதிமுகவுக்கு சாதகமாக கூறியிருக்கிறது என்பதற்காக அதில் நம்பிக்கை வைக்கவில்லை. அதேபோல், திமுகவுக்கு ஆதரவாக பல கணிப்புகள் வந்தாலும் அதை நான் ஏற்கவில்லை. எவ்வளவு முயற்சித்தாலும் மக்களின் மனதில் அது தாக்கம் செலுத்தாது என்பது எனது நம்பிக்கை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வாக்காளர்களின் மனநிலையை குறித்து பேசிய இபிஎஸ் , “தமிழகத்தில் தேர்தல் வந்தால் மக்கள் ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவாக இருப்பார்கள். குமரி முதல் சென்னை வரை உள்ள மக்களுக்கு தினசரி வாழ்க்கையில் தொடர்பு இல்லாவிட்டாலும், தேர்தலில் ஒரே மாதிரி யோசிப்பார்கள். யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதில் தான் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்,” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சியின் மீது மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மக்கள் நலத்திட்டங்களை திமுக கொண்டு வந்திருக்கலாம். ஆனால் சட்டம்-ஒழுங்கு நிலை, ஊழல், போதைப்பொருள் பரவல் — இந்த மூன்று விஷயங்களும் சரியாக இல்லை. நான் பிரச்சாரத்திற்காக சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் இதைப்பற்றியே நேரடியாக குறை கூறினர்,” என்று இபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், நலத்திட்டங்கள் இருந்தாலும் இந்த மூன்று பிரச்சினைகள் மக்களிடம் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் திமுக ஆட்சியை மாற்ற மக்கள் முடிவு செய்திருக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ” எப்படி பார்த்தாலும் இந்த முறை திமுக ஆட்சி வீழ்த்தப்படும். நாம்தான் ஆட்சியை பிடிப்போம். அதனால் எக்சிட் போல் முடிவுகளை வைத்து குழப்பமடைய வேண்டாம்,” என்று கூறி தனது தொண்டர்களை உற்சாகப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More : “சின்னத்தம்பி உன்னை நம்பி காத்திருக்கும் இந்த நாடு..” விஜய் போட்டோ உடன் பாடலை பகிர்ந்த இளையராஜா..!

RUPA

Next Post

நகைக் கடன் பெறுபவர்கள், இந்த இரண்டு விஷயங்களை தெரிந்துகொள்ளாவிட்டால், பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்..!

Sat May 2 , 2026
நம் வீட்டில் உள்ள தங்கத்தை எடுத்து வங்கியில் அடமானம் வைத்தால், உடனடியாகக் கடன் கிடைத்துவிடும் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். ஆனால் தற்போது, ​​நீங்கள் ரூ. 2.2 லட்சத்திற்கும் அதிகமான தொகையைக் கடனாகப் பெற விரும்பினால், வருமான வரி விவரங்கள், ஜிஎஸ்டி (GST) விவரங்கள், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதத் தங்கப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்தக் குறிப்பிடத்தக்க முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக, ‘கடன்-மதிப்பு […]
gold loan 2 1

You May Like