Breaking : 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை..! தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் தவெக..!

vijay tvk 1

தமிழ்நாட்டில் கடந்த 23-ம் தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது..


காலை முதலே விஜய்யின் தவெக முன்னிலை வகித்து வருகிறது.. அதன்படி காலை 10 மணி நிலவரப்பட்டி தவெக 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. அதிமுக 78 இடங்களிலும் திமுக 51 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது..

தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் விஜய்யின் தவெக முன்னிலை வகிக்கிறது.. இதன் மூலம் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுக்க உள்ளது.. தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் விஜய் முன்னிலை வகிக்கிறார்.. திருச்சி கிழக்கில் சுமார் 3000 வாக்கு வித்தியாசத்திலும், பெரம்பூர் தொகுதியில் சுமார் 8000 வாக்கு வித்தியாசத்திலும் விஜய் முன்னிலை வகிக்கிறார்..

அதே நேரம் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.. மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு, கே.என்.நேரு, கீதா ஜீவன், ரகுபதி, அன்பில் மகேஷ் ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்..

RUPA

Next Post

முதுகுலத்தூர் தொகுதியை தக்க வைக்குமா திமுக..? ராஜகண்ணப்பனுக்கு ட்விஸ்ட்.. பரபர வாக்கு எண்ணிக்கை..!

Mon May 4 , 2026
Will DMK retain Mudukulathur constituency? Twist for Rajakannappan.. Extraordinary vote count..!
muthukulathor 1

You May Like