முதுகுலத்தூர் தொகுதியை தக்க வைக்குமா திமுக..? ராஜகண்ணப்பனுக்கு ட்விஸ்ட்.. பரபர வாக்கு எண்ணிக்கை..!

muthukulathor 1

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான முதுகுளத்தூர் தொகுதி, தற்போது நடைபெற்று வரும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அரசியல் வட்டாரத்தின் கவனத்தை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ ராஜமாணிக்கம், அதிமுக சார்பில் பாண்டி, நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திரபிரபா ஜெயபால் மற்றும் தமிழக வெற்றி கழகம் சார்பில் மலர்விழி போட்டியிட்டனர்.


முதுகுளத்தூர் தொகுதியில் மொத்தம் 2,98,958 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,48,876 பேர், பெண் வாக்காளர்கள் 1,50,080 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் அடங்குகின்றனர். 2026 தேர்தலில் இந்த தொகுதியில் சுமார் 76.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலை விட சுமார் 5 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் 1,01,901 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் 81,180 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 11,234 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தார். அந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 71.18 ஆக இருந்தது.

தபால் வாக்கு அடிப்படையில் சசிகலா கட்சியின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் டாக்டர் ராம் குமார் முன்னிலை பெற்றார்.
தற்போதைய நிலவரப்படி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ராஜகண்னப்பன் 7743 வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.

Read more: துணை முதலமைச்சர் உதயநிதி தொடர்ந்து பின்னடைவு.. மின்னல் வேகத்தில் தவெக..! பரபரக்கும் களம்..

English Summary

Will DMK retain Mudukulathur constituency? Twist for Rajakannappan.. Extraordinary vote count..!

Next Post

வரலாற்று திருப்பம்.. 1977க்கு பிறகு முதல் முறை அரசியல் மாற்றம்.. கொண்டாட்டத்தில் தவெகவினர்..!

Mon May 4 , 2026
Historical turning point.. First political change since 1977.. TVK members celebrate..!
vijay mgr

You May Like