தவெக தலைவர் விஜய்க்கு தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்த அஜித்..! நண்பேண்டா மொமெண்ட்..

Ajith Vijay 2025

கோலிவுட் திரையுலகில் ஒரே காலகட்டத்தில் உயர்ந்த நடிகர்களாக உருவெடுத்தவர்கள் அஜித் குமார் மற்றும் விஜய். இவர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானாலே திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்பது வழக்கம். கடைசியாக வெளியான “வாரிசு” மற்றும் “துணிவு” திரைப்படங்கள் இந்த போட்டியை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றது.


சினிமாவில் “அடுத்த சூப்பர்ஸ்டார் யார்?” என்ற விவாதம் நீண்ட காலமாக நிலவி வந்த நிலையில், விஜய் திடீரென அரசியலுக்குள் நுழைந்து புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். மறுபக்கம், அஜித் தனது ரேசிங் ஆர்வத்தை மீண்டும் தொடங்கி, தற்போது சினிமாவை விட அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த மாற்றங்களால், முன்பு ரசிகர்களுக்கிடையில் இருந்த கடும் போட்டி தற்போது மெல்ல குறைந்து நல்லுறவாக மாறியுள்ளது. குறிப்பாக கரூர் விபத்து சம்பவத்தில் அஜித், விஜய்க்கு ஆதரவாக பேசியது, விஜய் ரசிகர்களிடையே அவருக்கு கூடுதல் மரியாதையை ஏற்படுத்தியது. மேலும், மற்ற சில நடிகர்கள் வெளிப்படையாக விமர்சித்த சூழலிலும், அஜித் இதுவரை விஜயை பற்றி எந்த எதிர்மறை கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் அரங்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழலில், அஜித் தொலைபேசி மூலம் விஜயை தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையின் போது அஜித் முதல் ஆளாக வந்து தனது வாக்கை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

Read more: Flash: “புதிதாக பொறுப்பேற்கும் அரசிற்கு வாழ்த்துகள்..!” தவெக பெயரை குறிப்பிடாத உதயநிதி..! பரபர பேட்டி..

English Summary

Ajith congratulated TTV leader Vijay over the phone..!

Next Post

ஸ்டாலின் மீண்டும் போராடுவார்.. மீண்டும் வெல்வார்.. கமல் பதிவு..!

Mon May 4 , 2026
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.. தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின் கோட்டையை தகர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களிலும் அதிமுக […]
stalin kamal

You May Like