Flash: “புதிதாக பொறுப்பேற்கும் அரசிற்கு வாழ்த்துகள்..!” தவெக பெயரை குறிப்பிடாத உதயநிதி..! பரபர பேட்டி..

udhay

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இதே நேரத்தில் இப்படியான முடிவு வரும் என யாரேனும் கூறியிருந்தால், அதை நம்புவது பலருக்கும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது வெளியாகியுள்ள முடிவுகள் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன.


முக்கியமாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாம் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியை சந்தித்தது இந்த தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக மாறியுள்ளது. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பல முக்கிய இடங்களில் பின்னடைவை சந்தித்துள்ளன.

அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ (TVK) முதல் தேர்தலிலேயே வரலாறு படைத்துள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, 100-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றது அரசியல் விமர்சகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சென்னை நகரில் பெரும்பாலான தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றுள்ளது. விஜய் தாம் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், “சேப்பாக்கம் மக்களுக்கு நன்றி. தொகுதிக்காக முழு அர்ப்பணிப்புடன் உழைப்பேன். மக்களின் தேவைகளை நிறைவேற்றும் நல்ல சட்டமன்ற தலைவராக இருப்பேன். வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். புதிதாக பொறுப்பேற்கும் அரசிற்கு வாழ்த்துக்கள். மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்” என்றார்.

Read more: தொங்கு சட்டசபை வந்தால்.. சபாநாயகர் யார்..? லிஸ்டில் 3 பேர்..! விஜய் யாரை டிக் செய்யப் போகிறார்..?

Next Post

முதல் தேர்தலிலேயே மாபெரும் வெற்றி.. பெற்றோரை சந்தித்து ஆசி பெற்றார் விஜய்..!

Mon May 4 , 2026
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது.. தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின் கோட்டையை தகர்த்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.. முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய வெற்றி என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது..  தற்போதைய நிலவரப்படி தவெக 107 இடங்களில் முன்னிலை வகித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. ஆளுங்கட்சியான திமுக 74 இடங்களிலும் அதிமுக […]
tvk vijay n

You May Like