தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது..
முதல்வர் ஸ்டாலின் இதுவரை 7 முறை தேர்தல் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.. 1989, 1996, 2001, 2006 தேர்தல்களில் போட்டியிட்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மு,க ஸ்டாலின் வெற்றி பெற்றார்.. சென்னை கொளத்தூர் தொகுதியில் 2011, 2021, 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்..
இந்த சூழலில் 2026 தேர்தலிலும் கொளத்தூர் தொகுதியில் 4-வது முறையாக போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.. முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் தோற்திருக்கக் கூடாது என்று திமுக தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் விமர்சர்களும் மாற்றுக் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஏனெனில் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு எண்ணற்ற நலத்திடங்களை முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார்.. கொளத்தூர் தொகுதியை மேம்படுத்திய முதல்வர் ஸ்டாலினை தோற்கடித்த மக்களை சமூக வலைதளங்களில் பலரும் சாடி வருகின்றனர்..
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசி உள்ளார்.. ஸ்டாலினின் இல்லத்திற்கே சென்று சந்தித்த ரஜினி, உங்கள் மக்கள் பணி எப்போதும் போல் தொடரட்டும் என்று ரஜினி வாழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் உங்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு எதுவும், இதைவிட மோசமான தோல்விகளை திமுக சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்துள்ளது.. எனவே திமுகவுக்கு நான் ஆறுதல் சொல்ல தேவையில்லை.. இதை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. நீங்கள் உங்கள் பணியை தொடரவேண்டும்..” என்று ரஜினிகாந்த் ஸ்டாலினிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது..
வெற்றியில் மட்டுமல்ல, தோல்வியிலும் உடன் இருப்பேன் என்ற வகையில் இன்று ஸ்டாலினை ரஜினி சந்தித்து பேசியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ஏற்கனவே சமூக வலைதளங்களில் ரஜினி – விஜய் ரசிகர்கள் மோதிக் கொண்டு வருகின்றனர்.. விஜய் முதல்வராக பதவியேற்க உள்ள இந்த சூழலில் ரஜினி – ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..
Read More : தவெக ஆதரவு எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது.. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. செம ஷாக்கில் திமுக..!



