தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில், விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. இதையடுத்து நேற்று தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார்.. மேலும் விஜய் முதலமைச்சராக ஆதரவு அளித்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம் உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து பெறப்பட்டுள்ளது..
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. ஆனால் தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை.. எனினும் விஜய் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரி உள்ளார்.. கவர்னரும் அதற்கு அனுமதி அளிப்பார்.. ஆனால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சட்டசபையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்..
இதனிடையே தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மதவாத சக்திகளை கூட்டணியில் இணைக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெக உடன் கூட்டணி அமைப்பதாக காங்கிரஸ் கூறியுள்ளது.. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது.. தவெக ஆட்சியமைக்க மேலும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. எனவே தவெக விசிக, கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. இன்று மக்கள் மாளிகைக்கு சென்ற பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. அப்போது தவெக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், வெங்கட் ரமணன் ஆகியோர் உடனிருந்தனர்.
தவெக தலைவர் விஜய் நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.. நாளை காலை 11 மணிக்கு அவரது பதவியேற்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.. இந்த விழாவில் 5000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
Read More : விசிகவிடம் ஆதரவு கோரிய தவெக.. திருமாவின் முடிவு என்ன..? திமுகவுக்கு ஷாக் கொடுப்பாரா..?



