வற்றாத மூலிகை கிணறுகள்.. தோல் வியாதியையும் தீர்க்கும் அதிசய தலம்.. சேலம் சித்தர் கோவில் பற்றி பலருக்கு தெரியாத தகவல்!

Kanjamalai 2025

தமிழகத்தில் மர்மங்களும் அதிசயங்களும் நிறைந்த பல கோயில்கள் உள்ளன. அந்த வரிசையில், சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே அமைந்துள்ள சித்தர் கோவில் தற்போது பக்தர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக தோல் வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கையால், இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகை தருகின்றனர்.


இந்த கோவில், கஞ்சமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலிகைத் தாவரங்கள் அதிகமாக காணப்படும் இந்த மலைப்பகுதி, பழங்காலத்திலிருந்தே சித்தர்கள் வாழ்ந்த புனித நிலமாக கருதப்படுகிறது. இங்கு உள்ள இயற்கை சூழல், மருத்துவ குணம் கொண்டதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

இந்த கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, எப்போதும் வற்றாத ஏழு மூலிகை கிணறுகள் ஆகும். இந்த கிணறுகளில் உள்ள நீர், மலையிலிருந்து மூலிகைகள் வழியாக வடிகட்டி வரும் என்பதால், மருத்துவ குணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், எவ்வளவு கடுமையான தோல் வியாதியாக இருந்தாலும், இங்கு நீராடினால் குணமாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

பழமையான நம்பிக்கைகளின்படி, காலாங்கி சித்தர் மற்றும் திருமூலர் போன்ற சித்தர்கள் இந்த பகுதியில் தவம் செய்து, மனிதனை இளமையாக்கும் அரிய மூலிகைகளை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. அந்த மூலிகைகள் வழியாக உருவாகும் நீரே இந்த ஏழு கிணறுகளின் ஆதாரம் என பக்தர்கள் நம்புகின்றனர்.

மேலும், இந்த கோவிலில் உள்ள “காந்த தீர்த்தம்” எனப்படும் குளமும் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கிறது. இங்கு உப்பு, மிளகாய் போன்றவற்றை சுற்றி வைத்து வழிபட்டால் தீராத பிரச்சினைகளும் தீரும் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு திறந்திருக்கும். கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.

Read more: ‘மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ ஆளுநர் மாளிகை வெளியிட்ட குறிப்பால் சர்ச்சை..!

English Summary

Endless herbal wells.. a miraculous place that cures skin diseases… Information that many people don’t know about the Salem Siddhar Temple!

Next Post

யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்..! திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி..? தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு..!

Thu May 7 , 2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக தனித்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.. ஆனால் போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆளுநர் இதுவரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கவில்லை.. மறுபுறம், திமுக தனித்து 59 தொகுதிகளிலும், அதிமுக 47 […]
Stalin EPS 2025

You May Like