தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.. திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றாலும், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது..
சென்னை கொளத்தூர் தொகுதியில் 2011, 2021, 2021 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில், 2026 தேர்தலில் கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.. முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியில் தோல்வி அடைந்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
முதல்வர் ஸ்டாலின் தோற்திருக்கக் கூடாது என்று திமுக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும், மாற்றுக் கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் தவெகவுக்கு ஓட்டுப் போட்டவர்கள் கூட ஸ்டாலின் தோல்வி அடைந்ததற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர்..
இந்த நிலையில் ஸ்டாலின் தோல்விக்கு இபிஎஸ் வருத்தம் தெரிவித்ததாக புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து பேசிய அவர் ” திமுக பாரம்பரியம் கொண்ட அரசியல் கட்சி.. 70 ஆண்டுகள் பழமையான கட்சி தமிழக மக்களின் நலனுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் கட்சி தானே.. நாங்கள் அதனை கேவலப்படுத்தியா பேச முடியும்.. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு கூட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வருத்தம் தெரிவித்தார்..
ஸ்டாலின் எல்லாம் எவ்வளவு பெரிய தலைவர்.. அவரே வெற்றி வாய்ப்பை இழக்கும் அளவுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் எண்றால், இந்த மக்கள் எப்படி யோசிக்கிறார் என தெரியவில்லை என இபிஎஸ் மனதார வருந்தினார்.
அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தாலும், அரசியல் மாண்புள்ளவர் இபிஎஸ்.. அரசியல் தலைவர்கள் எல்லாம் வெற்றி பெற வேண்டும்.. இதுபோன்ற நிலை வரக்கூடாது.. அப்படிப்பட்ட தலைமை பண்பு கொண்டவர் தான் எங்கள் தலைவர் ” என்று கூறினார்..
Read More : விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல்..? நீலாங்கரை வீட்டின் முன்பு உயர்மட்ட பாதுகாப்பு அகற்றம்..!



