காங்கிரஸ் அசிங்கப்படப் போவது உறுதி.. தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்..? பாஜக சொன்னதை நோட் பண்ணீங்களா..?

B L Santhosh

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது.. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன..


தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தனித்தனியே கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது.. தவெகவின் நிர்வாகிகள் நேரடியாகவும் சென்று ஆதரவு கோரினர்.. இதுகுறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றன.. எனினும் எந்த முடிவு ஏற்படாமல் உள்ளது..

இந்த நிலையில் பாஜக தேசிய பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் தமிழக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை காலம் தான் முடிவு செய்யும்.. ஒன்று மட்டும் உறுதி, காங்கிரஸ் கட்சி பலத்த அவமானத்தை சந்திக்கும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளார்..

RUPA

Next Post

தினமும் வெறும் ரூ.45 சேமியுங்கள்..! முதிர்வு காலத்தில் ரூ.25 லட்சம் உங்களுடையது..! பிரமிக்க வைக்கும் ஒரு திட்டம்..!

Fri May 8 , 2026
நீங்கள் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்து, அதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பெற விரும்பினால், LIC உங்களுக்காகவே ஒரு சிறந்த திட்டத்தை வைத்துள்ளது. இத்திட்டம், ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்புடன் சேர்த்து, ஒரு பெரிய தொகையையும் (Sum Assured) வழங்குகிறது. அதன்படி, தினமும் வெறும் 45 ரூபாயைச் சேமிப்பதன் மூலம், லட்சக்கணக்கான ரூபாயைத் திரட்ட முடியும். இது ஆயுள் காப்பீட்டுப் பலன்களையும் வழங்குகிறது. இத்திட்டம் ‘New Jeevan Anand Policy’ […]
Money Rupees

You May Like